VIDEO: நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்.. வெளியான பரபரப்பு வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் திடீரென குலுங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் இருந்து மேற்கு வங்கத்தின் துர்காபூர் நகருக்கு நேற்று இரவு ஸ்பைஸ் ஜெட் விமானம் பயணிகளுடன் வந்துக் கொண்டு இருந்தது. துர்காபூர் அருகே வந்ததும் விமானம் தரையிறங்குவதற்கு ஏதுவாக தாழ்வாக பறக்கத் தொடங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஏர் - டர்பியுலன்ஸ் (Turbulence) காரணமாக விமானம் பயங்கரமாக குலுங்கியது.
தரையிறங்க வேண்டிய நேரத்தில் விமானம் திடீரென குலுங்கியதால் பயணிகள் பயத்தில் அலறத் தொடங்கினர். விமானம் குலுங்கியதில் சில பயணிகள் இருக்கைகளில் இருந்து கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் 12 பயணிகள் மற்றும் 3 விமானப் பணியாளர்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.
இதனை அடுத்து சிறிது நேரத்திலேயே விமானம் துர்காபூரில் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து, காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
Horrific video shows moments of panic inside the Mumbai-Durgapur SpiceJet flight after it witnessed severe turbulence while landing. #SpiceJet pic.twitter.com/dJ2e3bJN7z
— Vani Mehrotra (@vani_mehrotra) May 2, 2022
இந்த நிலையில் விமானம் குலுங்கிய போது பயணிகளால் எடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒழுங்குமுறை விசாரணைக்காக குழுக்களை நியமிக்க உள்ளதாக பொதுமக்கள் விமானப் போக்குவரத்து இயக்ககம் (DGCA) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக விமான பாதுகாப்பு இயக்குநர் எச்.என். மிஸ்ரா விசாரணை நடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/