"அவரு மட்டும் அடிச்சு ஆட ஆரம்பிச்சுட்டாரு... அப்றம் எந்த 'கொம்பன்' நெனச்சாலும் அவர 'கன்ட்ரோல்' பண்ண முடியாது..." 'இந்திய' வீரரை புகழ்ந்து தள்ளிய 'முன்னாள்' வீரர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி இங்கிலாந்து அணியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து சந்திக்கவுள்ளது.
முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியை 227 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றிருந்தது. அஸ்வினைத் தவிர மற்ற சுழற்பந்து வீச்சாளர்கள், இங்கிலாந்து அணிக்கு அதிக அழுத்தம் கொடுக்காததால் அந்த அணி எளிதாக ரன்களை குவித்தது.
அது மட்டுமில்லாமல், இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே மற்றும் அதிரடி வீரர் ரோஹித் ஷர்மா ஆகியோர் பெரிய அளவில் ரன்களை குவிக்காமல் போனதும் விமர்சனத்துக்குள் ஆனது. இதனால், நாளைய போட்டியில் இவர்கள் இருவரும் சிறப்பாக ஆட வேண்டும் என பலர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், ரோஹித் ஷர்மாவுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
'டெஸ்ட் போட்டிகளுக்கு வேண்டி, ரோஹித் ஷர்மா தனது இயல்பான பேட்டிங் ஸ்டைலை மாற்றக்கூடாது. அவர் அனுபவம் மிக்க க்ளாஸ் பிளேயர். ஒருமுறை அவர் ஆடுகளத்தில் நிலைத்து விட்டால் போதும். ரன்கள் தானாக ஏறும். அதன்பிறகு, அவர் அதிரடியாக ஆடுவதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்' என ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
அதே போல, இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரரான அன்ஷுமான் கெயிக்வாட், 'முதல் போட்டியில் ரோஹித் செய்த குறைகளை அடையாளம் கண்டு, அதனை நாளைய போட்டியில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர் அதிரடியாக ஆடத் தொடங்கினால் போதும். எந்த கேப்டன் நினைத்தாலும் அவருக்கு எதிராக ஃபீல்டிங்கை செட் செய்ய முடியாது. நிச்சயம் அடுத்த போட்டியில் அவர் சிறப்பாக ஆடுவார்' என கெயிக்வாட் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.