மாலை சூட்டிய மணமகன்.. மணமேடையில் பளார்'ன்னு கேட்ட சத்தம்.. கல்யாணத்தில் பரபரப்பு
முகப்பு > செய்திகள் > இந்தியாசமீப காலமாகவே, திருமண மேடைகளில் கடைசி நிமிடத்தின் போது, நடக்கும் ஏதாவது ஒரு நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகும்.
மணமக்களை தேர்வு செய்து, அதன் பின்னர் மண்டபம் தொடங்கி, சமையல் வரை அனைத்தையும் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்து, தங்கள் வாழ்வில் மிக சிறந்த நாளான திருமணத்தை மிகவும் ஜோராக நடத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும்.
அந்த வகையில், ஒவ்வொன்றையும் யோசித்து யோசித்து நடைபெறும் திருமண நிகழ்ச்சியில், மேடையில் வைத்து நடைபெறும் சம்பவங்கள் நிச்சயம் அங்கிருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும்.
திருமண மேடையில் நடந்த சம்பவம்
அப்படி ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தான், இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் வைத்து ஒரு திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், அங்கு இருந்துள்ளனர். மணப்பெண்ணின் கழுத்தில் மாலையிட மாப்பிள்ளை முற்பட்ட போது தான், யாரும் எதிர்பாராத நிகழ்வு அங்கு நடந்தது.
கன்னத்தில் அறைந்த மணப்பெண்?
அந்த நேரத்தில், திடீரென மணப்பெண் மாப்பிள்ளையை இரண்டு முறை வேகமாக கன்னத்தில் அறைந்துள்ளார். இதனைக் கண்டதும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, மேடையில் இருந்தும் மணப்பெண் இறங்கி கீழே சென்று விட்டார். இதன் பின்னர், இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே பரபரப்பானதாக கூறப்படுகிறது.
இதற்கான காரணம் என்ன என்பது சரிவர தெரியாத நிலையில், மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை என்பதால் தான், இப்படி மேடையில் வைத்து அந்த பெண் அறைந்து விட்டுச் சென்றார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் பின்னர், உள்ளூர் போலீசார் மற்றும் குடும்பத்தினர் இணைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
பின்னர், நிலைமை சரியானதும் சற்று தாமதமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், நெட்டிசன்களும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அண்மைக் காலங்களில் இதுபோன்ற பல ஜோடிக்கப்பட்ட திருமண வீடியோக்கள் பரவி வருவதாகவும், இது அப்படியானதொரு வீடியோவாக கூட இருக்கலாம் என்றும் பலரும் கருத்து கூறியுள்ளனர்.