'ஜாலியா 'ஹனிமூன்' போன ஜோடி'...'போன இடத்துல இப்படியா நடக்கணும்'?... அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | May 13, 2019 11:33 AM

ஆசையாக ஹனிமூன் சென்ற இடத்தில இந்திய வம்சாவளி பெண்,மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

British Indian woman dies on honeymoon in Sri Lanka

வடக்கு லண்டனில் உள்ள பின்ச்லே பகுதியில் வசித்து வருபவர் கிளன் சந்தாரியா.33 வயதான இவருக்கும்,அதே பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான உஷிலா படேல் என்பவருக்கும் கடந்த மாதம் 19-ம் தேதி திருமணம் நடைபெற்றது.3 வருடங்களாக தீவிரமாக காதலித்த இருவரும் திருமணம் செய்த மகிழ்ச்சியில் இரண்டு நாள் தேனிலவுப் பயணமாக இலங்கையின் காலே பகுதிக்குச் சென்றுள்ளனர்.அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்கிய இருவரும் தேனிலவை கொண்டாடிவிட்டு மாலத்தீவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இதனிடையே கடந்த ஏப்ரல் 25-ம் தேதி இருவருக்கும் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.ரத்த வாந்தி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.அங்கு சிகிச்சை பலனில்லாமல் சந்தாரியாவின் மனைவி உஷிலா மரணமடைந்தார்.சந்தாரியாவுக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனிடையே தனது மனைவி  உஷிலாவின் மரணத்திற்கு ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவே காரணம் எனவும்,அவர்கள் வழங்கிய உணவில் கெட்ட வாடை வீசியதாகவும் சந்தாரியா புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரின் புகாரை மறுத்துள்ள ஹோட்டல் நிர்வாகம் 'இருவரும் சாண்ட்விட்ச், சிப்ஸ் சாப்பிட்டனர். கூடவே வோட்கா மற்றும் கூல்ட்ரிங்ஸ் மட்டுமே குடித்தனர்'' அப்படி இருக்கையில் எங்களது உணவு தரமற்றது என கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.இந்நிலையில் விசாரணை முடியும் வரை சந்தாரியா இலங்கை காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் அவரை லண்டனிற்கு அனுப்ப முடியாது எனவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே உஷிலாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், உடல் வறட்சி மற்றும் வாந்தியின் காரணமாக அவர் இறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசையாய் திருமணம் செய்த காதல் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் சந்தாரியா, 'தினமும் அவள் என்னோடு பேசிக்கொண்டு தான் இருக்கிறாள். அவள் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருப்பாள். என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #SRILANKA #BRITISH INDIAN WOMAN #HONEYMOON #KHILAN CHANDARIA #USHEILA PATEL