"அந்த 'மனசு' தான் சார் 'கடவுள்'..." ஒரே நாளில் இன்டர்நெட் 'ஹீரோ'வான ஆட்டோ 'டிரைவர்'... குவியும் 'பாராட்டு'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆட்டோ டிரைவர் ஒருவர் செய்த நேர்மையான செயலால், ஒரே நாளில் இன்டர்நெட் முழுவதும் ஹீரோவாகி, நெட்டிசன்கள் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
புவனேஸ்வர் (Bhubaneswar) பகுதியைச் சேர்ந்த சுசந்தா சாஹு (Susanta Sahoo) என்பவர், சில தினங்களுக்கு முன் ஓலா (OLA) ஆட்டோ ஒன்றில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது, அவர் ஆட்டோவில் இருந்து இறங்குவதற்கு முன், தனது மொபைல் போன் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை ஆட்டோவில் தவற விட்டுச் சென்றுள்ளார்.
அதன் பிறகு, தனது பொருட்கள் தொலைந்து போனது தெரிய வந்ததும் சுசந்தா அதிர்ந்து போயுள்ளார். இதனிடையே, சுசந்தா பயணித்த ஆட்டோவின் டிரைவரான ஜெகன்நாதா பத்ரா (Jagannatha Patra), சுசந்தாவின் உரிமைகளை அவரிடமே திரும்ப வந்து கொடுத்துள்ளார். ஆட்டோ டிரைவரின் செயலால் நெகிழ்ந்து போன சுசந்தா, ஜெகன்நாதவின் நேர்மையை பாராட்டி, அதற்கான வெகுமதியை கொடுக்க முயன்றுள்ளார். ஆனால், அதனை அன்பாக ஜெகன்நாதா மறுத்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து சுசந்தா ட்விட்டரில் பதிவிட, ஒரே நாளில் இன்டர்நெட் ஸ்டார் ஆகியுள்ளார் ஆட்டோ டிரைவர் ஜெகன்நாதா. தனது ட்விட்டர் பதிவில், ஜெகன்நாதாவின் அக்கவுண்ட் குறித்த தகவலை குறிப்பிட்ட சுசந்தா, அவரின் நேர்மையை பாராட்டி அவருக்கு ஏதாவது பண உதவி செய்ய நினைத்தால், இதன் மூலம் அதனை செய்து கொடுங்கள்' என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
Hey @Olacabs, just wanted to let you know about Jagannatha Patra, an amazing guy & my Ola auto driver( #Bhubaneswar) who returned my phone & wallet after I left them behind in a hurry after my ride. Politely refused when I offered him cash rewards as a return favour.🙏 pic.twitter.com/hlHRAaQTSQ
— Susanta Sahoo (@ugosus) March 13, 2021
Thanks everyone for showing your love & appreciation for Jagannatha.
I have already donated some money to him via Google Pay. If you want to support him, here’s his Google Pay address. Thanks!
cc: @Olacabs @ola_supports pic.twitter.com/rF3Yvxl7XZ
— Susanta Sahoo (@ugosus) March 14, 2021
Good Job brother. Honesty is the best policy
— Sanjay Sahoo (@CtcSanjay) March 14, 2021
He is a Hero.
— Ram (@ramkumar_) March 14, 2021
This appreciation n message should reach to every auto driver so that it can inspire to all there.. #inspiration #jagannathapatra🙏
— Subhashree muduli (@Subhashreemudu6) March 15, 2021
God Bless him. Humanity at its best.
— sundaram (@sundara08061407) March 14, 2021
ஆட்டோ டிரைவரின் நேர்மையான செயலை பாராட்டி, நெட்டிசன்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.