VIDEO 'நீங்க என்ன கேப்ரே டான்சரா?'... 'இப்படி டிரெஸ் போட்டா அப்பறம்'... 'கோமாளி பட நடிகையை'... 'பார்க்கில் தாக்கிய பொதுமக்கள்'... 'அதிர்ச்சி வீடியோவால் பெரும் பரபரப்பு!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 05, 2020 04:58 PM

நடிகை சம்யுக்தாவை பார்க்கில் உடற்பயிற்சி செய்யும்போது அணிந்திருந்த உடையைக் காரணம் காட்டி  பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bangalore Public Attacked Comali Actress Samyuktha Hegde In Park

பெங்களூரை பூர்விகமாகக் கொண்ட சம்யுக்தா ஹெக்டே தமிழில் ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் பள்ளிப்பருவ காதலியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளவர். இந்த கொரோனா லாக் டவுன் முழுவதும் அவர் பெங்களூரில் இருந்து வரும் நிலையில், உடற்பயிற்சி செய்வது, நடனமாடுவது போன்ற விஷயங்களில் அதிக ஆர்வமுள்ள சம்யுக்தா சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக அவர் வளையத்தை வைத்து நடனமாடும் வீடியோக்கள் அதிகளவு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று பெங்களூரில் உள்ள HSR லேஅவுட் அகரா ஏரி அருகே உள்ள பார்க்கிற்கு தன் நண்பர்களுடன் சம்யுக்தா உடற்பயிற்சி செய்வதற்காக சென்றிருக்கிறார். அங்கு அவர் ஒர்க்கவுட் உடையில் நண்பர்களுடன் வளையங்களை வைத்து பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, அங்கு வந்த வயதான பெண் ஒருவர் அவர்களை பார்த்து திட்ட தொடங்கியுள்ளார். குறிப்பாக அவர்கள் அணிந்திருந்த உடையை விமர்சித்து திட்டி அவர்களை தாக்க வந்துள்ளார். அந்தப் பெண் அவர்களிடம், "நீங்கள் என்ன கேப்ரே டான்சர்களா? என்ன உடை இது, இப்படி உடை அணிந்து கொண்டு பிறகு ஏதாவது நடந்தது என்று அழுது கொண்டே வந்து யாரிடமும் சொல்லாதீர்கள்" எனத் திட்டியுள்ளார்.

உடனேயே அங்கு கூட்டம் சேர்ந்து விட, இதுதொடர்பாக நடந்து கொண்டிருந்த வாக்குவாதத்தை சம்யுக்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் ஒர்க்கவுட் செய்வதற்காக ஸ்போர்ட்ஸ் பிரா மற்றும் ஒர்க்கவுட் பேண்ட் அணிந்து வந்து இருந்ததாகவும், சில ஆண்கள் தற்போது கன்னட சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் போதைப் பொருள் வழக்கில் இவரையும் தொடர்புபடுத்த போவதாக மிரட்ட தூங்கியதாகவும் சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தகவலறிந்து அந்த இடத்திற்கு வந்த போலீசார் இந்த பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்துள்ளனர். இதுபற்றி பேசிய சம்யுக்தா, "பட்டப்பகலில் அதுவும் பப்ளிக் பார்க்கில் ஒரு பெண் நாங்கள் ஒர்க்கவுட் உடை அணிந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்ததற்காக எங்களை அவமானப்படுத்தி தகாத வார்த்தைகளில் பேசுகிறார். நாங்கள் என்ன தவறு செய்தோம் இதையெல்லாம் சந்திப்பதற்கு" எனக் கேட்டுள்ளார். சம்யுக்தா பதிவிட்டிருந்த வீடியோவில் அவர் மிகவும் பதற்றத்துடன்  நிலையில், அந்த பார்க்கின் கேட்டையும் சிலர் பூட்டி வைத்திருந்ததால், அதை திறங்கள் என சம்யுக்தா தொடர்ந்து அவர்களிடம் கத்தியுள்ளார். வைரலான இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் சம்யுக்தாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Video 1 and 2, you can see the lady clearly (kavitha reddy) charging at my friend and attempting to hit her Video 3: after she tried to assault my friend, when we were waiting for the police to arrive some People in the park who knew her started supporting her and playing moral police and asking us if it is our culture to wear sports wear Video 4: this man in the red checkered shirt and about 10 men with her arrived right before the police did and started threatening us. His name is Anil, and you can clearly hear him threatening me. In my line of work even false news is enough to destroy my career and he threatened me exactly of that and the police stood there and just watched. This is when i decided to go live and have our side of the story put out there in the open After being in a democracy and following all the norms of social distancing, we were abused and ridiculed by Kavitha Reddy and the mob in Agara Lake for practicing our hoolahoop while wearing sportswear. Despite being polite and trying to solve the problem, the lady hit my friend and used disparaging remarks about me and my friends Was extremely disappointed with how the police who came to the location behaved , like nothing was wrong and spoke to her with respect while asked us to be quite. The cops stood there while her mob harassed us and even after requesting the police continuously, they decided to stand there and support this (proof on igtv) Yesterday was really hard and it was so disturbing to go through this When we went to the police station, everyone there already knew her and spoke to her nicely and saw us like we were wrong. The only police who spoke to us with some respect and told her she was wrong was the inspector is the hsr police station muni reddy, he asked us both to file our respective complaints and he left. We wrote the complaint and gave it to the police. The police present there refused to give us an acknowledgement for the same. Its not easy being strong around people who are trying to break you, and having to listen to so many people harass us for doing nothing. THIS IS JUST WRONG I request you all for your support 💛 @blrcitypolice #thisiswrong #punishkavithareddy

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bangalore Public Attacked Comali Actress Samyuktha Hegde In Park | India News.