'பாக்க தான் சாந்தமான முகம்'... 'பொண்ணோட தொடர்பு அப்பாக்கும் தெரியும்'... அதிரவைக்கும் வாட்ஸ்அப் உரையாடல்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிள்ளைகள் தவறான பாதைக்குச் செல்லும்போது பெற்றோர் அதைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு நல்வழி சொல்ல வேண்டும். ஆனால் பெற்றோருக்கு அறிந்தே அனைத்தும் நடப்பது தான் வேதனையின் உச்சம்.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி புல்வாமாமில் நடந்த தாக்குதலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி வகுப்பின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தார்கள். நாட்டையே அதிரவைத்த இந்த கோழைத்தனமான தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது. தாக்கல் செய்யப்பட்ட 13,500 பக்க குற்றப்பத்திரிகையில் 19 பேர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். இந்த தற்கொலைப் படை தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுக்கு உதவுவதில் இளம் பெண் ஒருவர் முக்கிய பங்கு வகித்ததாக அதில் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் வெடிகுண்டு தயாரித்த முக்கிய குற்றவாளி முகமது உமர் பாரூக் என்ற தீவிரவாதி கடந்த மார்ச் மாதம் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டான். இந்த தீவிரவாதியுடன் இன்ஷா ஜான், என்ற அந்த 23 வயது பெண் தொடர்பில் இருந்ததாக என்ஐஏ கூறுகிறது. தொலைப்பேசி மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வாயிலாக அவர்கள் தொடர்பிலிருந்தனர். வாட்ஸ்அப் மற்றும் இன்ன பிற சமூகவலைத்தளங்கள் மூலம் பரிமாறப்பட்ட செய்திகளை மீட்டெடுத்துள்ளார்கள். அவற்றைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். பல முறை இன்ஷாவின் வீட்டிற்கு பாரூக் வந்து சென்றுள்ளான்.
இதில் அதிரவைக்கும் மற்றொரு தகவல் என்னவென்றால் இருவரின் உறவை இன்ஷாவின் தந்தை தாரிக் பிர்வும் அறிந்து வைத்திருந்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது. பாரூக் மற்றும் இன்ஷா ஜான் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் இன்ஷா அதிநவீனத் துப்பாக்கிகளுடன் போஸ் கொடுக்கும் போட்டோக்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளார்கள். இதற்கிடையே மூத்த என்ஐஏ அதிகாரி 13,500 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த பின்னர் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதில், ''புல்வாமாவிலும் அதைச் சுற்றியும் உமர் பாரூக் மற்றும் இரண்டு கூட்டாளிகளின் நடமாட்டத்திற்கு இன்ஷாவின் தந்தை தாரிக் பிர் உதவி செய்துள்ளார்.
மேலும் அவர்கள் அனைவருக்கும் உணவு, தங்குமிடம் மற்றும் பிற தளவாடங்களை 15 க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் வழங்கி உள்ளனர். பயங்கரவாதிகள் ஒரு நேரத்தில் இரண்டு முதல் நான்கு நாட்கள் 2018 மற்றும் 2019 க்கு இடையில் பலமுறை தாரிக் பிர் வீட்டில் தங்கியிருந்ததாக'' அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
