ஓடி வாங்க.. கதவ உள்பக்கமா சாத்திட்டாரு.. உடைச்சு உள்ள போனப்போ போலீசார் கண்ட காட்சி.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 18, 2022 04:31 PM

புதுச்சேரி: பெரவள்ளூர் பெரியார் நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் மேரி அமல்ராஜ் (50). 2016-இல் இவரது கணவர் இறந்துவிட்டார்.

Pondicherry man decision taken by not returning the money

இவரது மகள் ரோஷ்னி (27). எழும்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் மேரி வேலை செய்கிறார். நேற்று மாலை 5 மணி அளவில் இவரது வீட்டின் வெளியே நின்ற 27 வயது ஆகும் வாலிபர் ஒருவர் மேரியிடம் தகராறு செய்துள்ளார். திடீரென மேரியின் கழுத்தை பிடித்து கீழே தள்ளிவிட்டு முதல் தளத்தில் மேரியின் வீட்டிற்கு சென்று கதவை சாத்திக் கொண்டார். உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் சூரிய லிங்கம் மற்றும் காவல்துறையினர் மேரியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு பெட்ரூம் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு காணப்பட்டது.

கதவை உடைத்து சென்றபோது அந்த வாலிபர் கை மணிக்கட்டு அறுக்கப்பட்டு, கழுத்தில் ரத்தக் காயத்துடன் கிடந்தார். அவரை மீட்ட போலீசார் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கத்தி ஏதும் இல்லாததால் தனது ஏடிஎம் கார்டை வைத்து கழுத்து மற்றும் கையை கிழித்துக் கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற நபர் புதுச்சேரியை சேர்ந்த அரவிந்தன் (25) என்பதும், இவரும், ரோஷ்னியும் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்ததும் தெரிந்தது. அப்போது, தந்தை இல்லாத ரோஷ்னிக்கு அடிக்கடி பணம் கொடுத்து உதவியுள்ளார்.

அந்த வகையில் அரவிந்தன் ரூ.3 லட்சம் வரை கொடுத்ததாக தெரிகிறது. இதை கடந்த 3 மாதமாக மேரியிடம் கேட்டு வந்துள்ளார். அதேபோல, நேற்று மாலையும் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். மேரி கொடுக்க மறுத்ததால் திடீரென வீட்டுக்குள் சென்று அரவிந்தன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

குறிப்பு: தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிப்பில்லாதது.  தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #PONDICHERRY #MONEY #புதுச்சேரி #பணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pondicherry man decision taken by not returning the money | Tamil Nadu News.