புத்தாண்டில் 80 ஆணுறைகள் வாங்கிய ஒரு நபர்! இந்தியா முழுக்க ஒரே நாள்ல 'இத்தனை' ஆர்டரா! சொமேட்டோ நிறுவனர் வெளியிட்ட தகவல்
முகப்பு > செய்திகள் > இந்தியாபுத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் அன்று மட்டும் 33,000 ஆணுறைகள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யப்பட்டு விற்கப்பட்டுள்ளதாக சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட தடை:
உலகம் முழுவதும் கடந்த வருடம் டிசம்பர் 31 அன்று ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பித்தது. வழக்கமாக இந்தியாவில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் இரவு கேளிக்கைகள், நடனங்கள், ஆடல், பாடல் என கொண்டாட்டப்படுவது வழக்கம். ஆனால், போன வருடமும் புத்தாண்டு தடைபட்டது. இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடுமையாக கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது.
பொது இடங்களில் இரவு நேரம் கூட்டம் கூடுவதற்கு பல இடங்களில் தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. குறிப்பாக சென்னை கடற்கரைகளில் யாரும் நுழையாத வண்ணம் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டிருந்தது. இளசுகள் பைக்கில் மது அருந்திவிட்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. விதிமுறையை மீறுகிறவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம்:
கடும் நெருக்கடிகள் இருந்தபோதிலும், இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாகவே கொண்டாடப்பட்டது. குறிப்பாக உலக நாடுகளில் உயர்ந்த கட்டிடங்களில் லேசர் லைட், பட்டாசு என ஆரவராமாக மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். இத ந்நிலையில், இந்தியாவின் பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான சொமேட்டோ நிறுவனர் புத்தாண்டுக்கு முந்தைய நாள் விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
33,000 ஆணுறைகள் விற்பனை:
அதில், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் பிளின்கிட் ஆன்லைன் தளத்தில் புத்தாண்டுக்கு முந்தின தினம் மட்டும் 33,000 ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டும் 80 ஆணுறைகளை வாங்கியுள்ளார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 1.3 லட்சம் லிட்டர் சோடா, 43,000 பாட்டில்கள் குளிர்பானங்கள், 6,712 ஐஸ்க்ரீம் டப்பாக்கள், 28,240 பாப்கார்ன் பொட்டலங்கள் என அந்த ஆன்லைன் தளத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும், 10,000 கொரோனா சுயசோதனை கருவியும் விற்பனை ஆகியுள்ளது. டிசம்பர் 31-ம் தேதி மாலை 7 மணி வரையிலும் சொமேட்டோவுக்கு ஒரு நிமிடத்துக்கு 7,100 ஆர்டர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.