விமான பயணத்தில் பிரபல நடிகர்... பயணிகளுக்கு சர்ப்ரைஸாக அறிவித்த பணிப்பெண்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Mar 29, 2023 07:37 PM

பாலிவுட் நடிகர் அனுபம் கேர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Anupam Kher After IndiGo Crew Gives Him A Special Welcome

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "தோனியை முதல்தடவை பார்த்தப்போ.. இப்படித்தான் நெனச்சேன்".. சின்ன தல ரெய்னா சொன்ன விஷயம்.. உருகிய ரசிகர்கள்..!

அனுபம் கேர்

பாலிவுட் உலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் அனுபம் கேர். 1955 ஆம் ஆண்டு பிறந்த அனுபம் கேர், இந்தி மட்டுமல்லாது பல வெளிநாட்டு படங்களிலும் நடித்திருக்கிறார். இதுவரையில் 2 தேசிய விருதுகள் மற்றும் 8 பிலிம் ஃபேர் விருதுகளை அனுபம் பெற்றிருக்கிறார். இவருடைய கலை சேவையை பாராட்டி இந்திய அரசு 2004 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருதினையும் 2016 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதினையும் வழங்கிக் கௌரவித்துள்ளது.

இவர் சமீபத்தில் நடித்துள்ள ஷிவ் சாஸ்திரி பால்போவா (Shiv Shastri Balboa) திரைப்படம் அண்மையில் ரிலீசானது. இப்படத்தினை அஜயன் வேணுகோபாலன் இயக்க இதில் அனுபம் கேர், நீனா குப்தா, நர்கிஸ் ஃபக்ரி, ஷரிஃப் ஹாஷ்மி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

விமான பயணம்

இந்த நிலையில் அனுபம் கேர் இண்டிகோ விமானத்தில் பயணித்திருக்கிறார். அப்போது, அதனை விமானத்தில் இருந்த பணிப்பெண் ஒருவர் சக பயணிகளுக்கு அறிவித்ததுடன், அவரை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், பயணிகள் அனைவரும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்க, இருக்கையில் அமர்ந்திருந்த அனுபம் கேர் எழுந்து நன்றி தெரிவிக்கிறார்.

இதனையடுத்து அவர் அங்கிருந்த பயணிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். அதனுடன் தங்களுடன் பயணித்ததற்கு நன்றி தெரிவித்து பணிப்பெண் ஒருவர் குறிப்பை அனுபம் கேருக்கு அளித்திருக்கிறார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுளளார்.

Images are subject to © copyright to their respective owners.

தன்னுடைய பதிவில் விமானி, பணிப் பெண்கள் ஆகியாரை குறிப்பிட்டு தன்னுடைய உழைப்பை பெருமைப்படுத்தும் வகையில் இந்த செயல் இருந்ததாகவும் அதற்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் அனுபம் கேர். இந்த பதிவு தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | உடற்பயிற்சியின் போது நடந்த விபரீதம்.. மருத்துவமனையில் பிரிந்த உயிர்.. ஜிம் மாஸ்டருக்கு நேரந்த சோகம்..!

Tags : #ANUPAM KHER #INDIGO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Anupam Kher After IndiGo Crew Gives Him A Special Welcome | India News.