பட நிகழ்ச்சிக்கு ஆட்டோவில் வந்திறங்கிய நடிகர் அனுபம் கேர்.. இதான் காரணமாம்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேர் தனது பட விழாவிற்கு ஆட்டோவில் சென்றது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | செல்ல நாய்க்கு ஏற்பட்ட பாதிப்பு.. மருத்துவ செலவுக்காக வீட்டையே விற்க முடிவெடுத்த நபர்.. என்ன மனுஷன்யா..!
பாலிவுட் உலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் அனுபம் கேர். 1955 ஆம் ஆண்டு பிறந்த அனுபம் கேர், இந்தி மட்டுமல்லாது பல வெளிநாட்டு படங்களிலும் நடித்திருக்கிறார். இதுவரையில் 2 தேசிய விருதுகள் மற்றும் 8 பிலிம் ஃபேர் விருதுகளை அனுபம் பெற்றிருக்கிறார்.
இவருடைய கலை சேவையை பாராட்டி இந்திய அரசு 2004 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருதினையும் 2016 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதினையும் வழங்கிக் கௌரவித்துள்ளது. இவர் சமீபத்தில் நடித்துள்ள ஷிவ் சாஸ்திரி பால்போவா (Shiv Shastri Balboa) திரைப்படம் வரும் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இப்படத்தினை அஜயன் வேணுகோபாலன் இயக்க இதில் அனுபம் கேர், நீனா குப்தா, நர்கிஸ் ஃபக்ரி, ஷரிஃப் ஹாஷ்மி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பு திரையிடல் டெல்லியில் உள்ள Connaught Place-ல் நடைபெற்றது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
Images are subject to © copyright to their respective owners.
அப்போது, திடீரென அனுபம் கேர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி வர அங்கிருந்த அனைவரும் அதனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இதனை தொடர்ந்து சிறப்பு திரையிடல் நடைபெற்றது. தன்னுடைய ஆட்டோ பயண வீடியோவை அனுபம் கேர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
மேலும், தான் தவறான தியேட்டருக்கு சென்றுவிட்டதாகவும் அதனாலேயே ஆட்டோவில் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அனுபம் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அந்த பதிவில்," எதுவேண்டுமானாலும் நடக்கலாம்: என்னுடைய திரைப்படமான ஷிவ் சாஸ்திரி பால்போவா டெல்லியில் திரையிடப்பட இருந்தது. தவறான தியேட்டரில் என்னை இறக்கிவிட்டார் டிரைவர். ஆகவே சரியான நேரத்திற்கு செல்ல வேண்டியதால் ஆட்டோவில் சென்றேன். இது மகிழ்ச்சியாகவே இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.