ஆஹா... இதான் OUT OF THE WORLD-ஆ??.. பூமியில் உதயமாகும் நிலா.. ஐடியாவே சும்மா அள்ளுதே..
முகப்பு > செய்திகள் > உலகம்உலகிலேயே மிக உயரமான கட்டிடம் ஆன புர்ஜ் கலிஃபா துபாயில் தான் உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையில் யாருமே நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் ஆடம்பர வசதியுடன் கூடிய ரிசார்ட் ஒன்று துபாயில் வரப் போவது தொடர்பான செய்தி, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
நிலவு வடிவிலான ரிசார்ட் ஒன்று துபாயில் அமையப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
அது மட்டுமில்லாமல், இதில் உள்ள சிறப்பம்சம் தொடர்பான செய்தி தான் இந்த நிலா விடுதியில் மதி மயக்கும் விஷயங்களாக பார்க்கப்படுகிறது. கனடாவில் அமைந்துள்ள மூன் வேர்ல்டு ரிசார்ட்ஸ் இன்க் நிறுவனத்தால் சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.
அதே போல, இந்த ரிசார்ட்டுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதனைக் கட்டி முடிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த கட்டிடத்திற்கு மூன் துபாய் (Moon Dubai) என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதிலுள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
இந்த ரிசார்ட் ஆனது, மொத்தமாக சுமார் 224 மீட்டர் (734 அடி) உயரத்தைக் கொண்டிருக்கும். மேலும் இது சந்திரனின் மேற்பரப்பில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்குள் ஆடம்பரமான குடியிருப்புகள் ஏராளம் இருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கும் நிலையில், மூன் துபாய்க்கு வருகை தரும் விருந்தினர்கள் அங்கே ஸ்பா, இரவு விடுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரிசார்ட், ஆண்டு தோறும் சுமார் பத்து மில்லியன் பார்வையாளர்களுக்கு வசதியாக இடமளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பொழுதுபோக்கு, கல்வி, தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி சுற்றுலா மையங்கள் போன்ற துறைகளில் உள்ள வசதிகள் இங்கே இடம்பெறுவதால் மூலம், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த மூன் துபாய் அமைந்திருக்கும் என்றும் மூன் வேர்ல்டு ரிசார்ட்ஸ் இன்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மூன் துபாயின் மாதிரி புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.