'பொண்டாட்டி' பிரிஞ்சு போன 45 வது நாளுல... தன்னோட 3 கொழந்தைங்கள கொன்னுட்டு 'கடைசி'யில... இதயத்தை ரணமாக்கும் 'சோகம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் நலசோபரா பகுதியை சேர்ந்தவர் கைலாஷ் பார்மர். இவருக்கு 12 வயதில் மகனும், 13 மற்றும் 17 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கைலாஷ் பார்மருக்கு தனது மனைவியுடன் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி சில தினங்களுக்கு முன் கைலாஷ் மற்றும் குழந்தைகளை பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. இந்நிலையில், கைலாஷின் தந்தை நேற்று மாலை தேனீர் அருந்த வேண்டி அவரை அழைத்துள்ளார். மூன்று குழந்தைகளும் தூங்குவதாகவும், எழுந்ததும் செல்லலாம் என கைலாஷ் தெரிவித்துள்ளார். பின்னர் இரவு சுமார் 8 மணியளவில் கைலாஷின் தந்தை வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்.
நீண்ட நேரமாகியும்,கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். உள்ளே சென்று பார்த்த போது மூன்று குழந்தைகள் மற்றும் கைலாஷ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு கைலாஷின் தந்தை அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கைலாஷின் மனைவி பிரிந்து சென்று 45 நாட்கள் ஆன நிலையில், கைலாஷ் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டதாக தெரிகிறது. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கைலாஷ், தனது மூன்று பிள்ளைகளையும் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு இறுதியில் தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி பிரிந்து சென்ற வருத்தத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் கொன்று இறுதியில் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
