"'லாக்டவுன்' எல்லாம் கை குடுக்கல"... 'நாளை'யில இருந்து மாநிலம் ஃபுல்லா 'ஊரடங்கு' கேன்சல்... அறிவிப்பு வெளியிட்ட 'முதல்வர்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கடும் கொரோனா கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா நாளை காலை ஐந்து மணியுடன் பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதும் ஊரடங்கு முடிவு பெறுவதாக தெரிவித்துள்ளார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கு தொடரும் என்றும், பொருளாதார பாதிப்பு காரணமாக மக்கள் நாளை முதல் மக்கள் அனைவரும் வழக்கம் போல வேலைக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
'கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. கொரோனாவை தடுக்க ஊரடங்கு கை கொடுக்காது. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம். கொரோனா பரவலை தடுக்க வேண்டி மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சீரான பொருளாதாரத்தை நிலை நாட்டிக் கொண்டே கொரோனாவுக்கு எதிராக நாம் போராட வேண்டும்' என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 ஆயிரம் பேர் வரை தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 1300 பேர் வரை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.