இதான் லாஸ்ட் சான்ஸ்...! 'இந்த தேதிக்குள்ள' ஆதார்-பான் லிங்க் பண்ணலனா... - கண்டிப்பா 'ஃபைன்' கட்டியே ஆகணும்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 2019, செப்டம்பர் 30-ஆம் தேதி பான் எண்ணுடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலமுறை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது.
இப்போதும் பலர் பான் – ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். இதற்கு முன்பு மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்தது. ஆனால் அப்போதும் கொரோனா வைரஸ் பரவலால் மீண்டும் அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் ஆதார் அட்டை மற்று பான் அட்டைகளை இணைக்கும் அவகாசம் நிறைவடைய உள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
அதன்பின் வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கும் மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அவர்கள் ரூ.1000 வரை அபராதம் கட்ட நேரிடும் என குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளர்களின் முக்கிய பணவழிப் பரிமாற்றம், வங்கி, பிஎஃப், உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அனைத்தும் பாதிக்கப்படக் கூடும் எனத் வருமானவரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.