‘கொரோனா வைரஸ் பாதிப்பு உயிரிழப்பில்’... ‘ஆண்கள் தான் அதிகம்’... ‘மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் ஆண்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வயது விகிதத்தை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்டார். அவர் அளித்த தகவலின்படி, ‘ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களில் 63 சதவிகிதம் ஆண்கள், 37 சதவீதம் பெண்கள். 8 சதவீதம் 17 வயதுக்கு கீழானவர்கள், 13 சதவீதம் 18 முதல் 20 வயது நிரம்பியவர்கள், 39 சதவீதம் 26 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள், 26 சதவீதம் 45 முதல் 60 வயதுக்கும், 14 சதவீதம் 60-க்கும் மேற்பட்டவர்கள்.
கொரோனா பாதித்தவர்களின் உயிரிழப்பில் 70 சதவீதம் ஆண்களே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 55 சதவீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 33 சதவீதம் 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள், 10 சதவீதம் 26 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள், ஒரு சதவீதம் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு உயிரிழப்பில் மொத்தமாக 45 சதவீதம் 60 வயதுக்கு குறைவானவர்களே’ என தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பில் 60 சதவீதம் வெறும் 5 மாநிலங்களில் இருந்து மட்டும் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் என சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறினார். 26 முதல் 44 வயதுடையோர்கள்தான் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
