இனி 'அவங்க' டெலிவரி பண்ற 'உணவு' வேண்டாம்னா.. அப்றம் ஜெயில்ல 'களி'தான்.. அதிரடி எஸ்.பி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 01, 2019 07:48 PM

மத்திய பிரதேசத்தின் ஜபால்பூரைச் சேர்ந்த அமித் சுக்லா, இந்து அல்லாத உணவு டெலிவரி பாய் கொண்டுவந்த ஸொமாட்டோ உணவை வாங்க மறுத்து கேன்சல் செய்து, அதை ட்விட்டரிலும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

police warns the man who cancelled non-hindu riders food

ஆனால் ஸொமாட்டோ நிறுவனமோ, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘உணவுக்கு மதம் எல்லாம் இல்லை. மதம் மதம்தான்’ என்று ட்வீட் செய்தது. இதனையடுத்து பல்வேறு பிரபலங்களும் இணையவாசிகளும் ஸொமாட்டோவை பாராட்டியதோடு, சிலர் அமித் சுக்லாவுக்கும் ஆதரவு தெரிவித்தனர். #IStandwithZomato மற்றும் #IStandWithAmit போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின.

இதற்கு அமித் சுக்லா,  ‘இது சேவான் மாதம் என்பதால், தான் இந்து ரைடரை நிராகரித்து வேறு ஒரு உணவு டெலிவரி பாயை கோரியது, ரைடர் ஒரு இந்து என்பதால் எல்லாம் மாற்று ஏற்பாடு செய்ய முடியாது என்று ஸொமாட்டோ கூறியது, அதோடு ஆர்டரை கேன்சல் செய்தால் பணத்தைத் திரும்பத் தர ஸொமாட்டோ மறுத்தது, எனவேதான் ஆர்டரை மட்டும் கேன்சல் செய்தால் போதும்; பணத்தைத் திருப்பித் தர வேண்டாம்’ என்று, தான் கூறிவிட்டதாக தெரிவித்தார்.

எனினும் இனியும் இதுபோன்று இந்திய இறையாண்மைக்கு எதிராகவும்,  அமித் சுக்லா நடந்துகொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது அமித் சுக்லாவை காவல்துறை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பியதாகவும், தொடர்ந்து மதப்பிளவுகளை உண்டுபண்ணும் நோக்கில் நடந்துகொள்ளாமல் இருக்க எழுதி வாங்கவிருப்பதாகவும், இனி அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் என்றும் ஜபால்பூர் எஸ்.பி அமித் சிங் தெரிவித்துள்ளார்.

Tags : #ZOMATO #FOOD #ONLINE #DELIVERY #ZOMATOSAYSNOTOHATE #ISTANDWITHZOMATO