UNLOCK 3.0: தியேட்டர்கள், ஜிம்களுக்கு அனுமதி?... பள்ளிகள், மெட்ரோ ட்ரெயின்களுக்கு 'நோ'... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > இந்தியாமெட்ரோ ட்ரெயின்கள் மற்றும் பள்ளிகளுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இன்னும் சில தினங்களில் ஜூலை மாதம் முடிவுக்கு வருகிறது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் அரசு எந்தெந்த துறைகளுக்கு அனுமதி வழங்கும்? மீண்டும் ஊரடங்கு தொடருமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் மக்கள் அரசின் அறிவிப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்கள் மற்றும் ஜிம்கள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதே நேரம் மெட்ரோ ட்ரெயின்கள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றுக்கான தடை தொடர வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பெற்றோர்களிடம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது தொடர்பாக கருத்து கேட்டிருந்தது.
இதில் பெரும்பாலான பெற்றோர்களின் மனநிலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு எதிராகவே உள்ளதாம். இதனால் ஆகஸ்ட் மாதத்திலும் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. சினிமா தியேட்டர் அதிபர்களுடன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையடுத்து 50% பார்வையாளர்களுடன் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை பரிந்துரை செய்திருக்கிறது. இதனால் ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து திரையரங்குகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஜிம்களும் திறக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
விரைவில் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
