பெருசா கண்டுக்க மாட்றாங்க... இந்த அறிகுறிய 'அலட்சியம்' பண்ணாதீங்க... கொரோனாவா இருக்கலாம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஏராளமான நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தற்போது மனிதர்கள் மீதான சோதனையை நடத்தி வருகின்றன. சாதாரணமாக கொரோனா அறிகுறிகள் என சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் ஆகியவை கூறப்பட்டன.
![Diarrhea is one of the common symptom for Coronavirus Diarrhea is one of the common symptom for Coronavirus](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/diarrhea-is-one-of-the-common-symptom-for-coronavirus.jpg)
இந்த நிலையில் வயிற்று போக்கும் தற்போது ஒரு முக்கியமான அறிகுறியாக கருதப்படுகிறது. வைரஸ் சிலரது உடம்பில் சுவாச பாதைக்கு பதிலாக குடல் மற்றும் வயிற்றுப் பகுதியை முதலில் தாக்குகிறது. எனவே மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் வருவதற்கு முன்பாகவே வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
48 மணி நேரத்துக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருந்தால், அது ஏற்படுவதற்கு கெட்டுப்போன உணவு அல்லது வேறு காரணங்கள் என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மனித கழிவில் மூன்று மாதங்கள் வரை கொரோனா வைரஸ் இருக்கலாம் என ஆய்வுகள் கூறுவதால், தனிமைப்படுத்துதல் அவசியம்.
பெரும்பாலோனோர் வயிற்று போக்கினை ஒரு தீவிர அறிகுறியாக எடுத்து கொள்வதில்லை என்பதால் மருத்துவர்கள் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வயிற்றுப்போக்கை கொரோனாவின் அறிகுறியாக சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)