சைலண்டா சீனா என்னெல்லாம் வேலை பாக்குது! சாட்டிலைட் ஃபோட்டோவில் தெரிய வந்துள்ள அதிர்ச்சி உண்மை!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனா: சீனாவிற்கும் பூட்டான் நாட்டிற்கும் இடையே பல காலமாக எல்லை பிரச்சனை நடந்து வருகிறது.
டோக்லாம் என்ற பகுதி, பூடானில் தென்மேற்கில் இமயமலையில் அமைந்த குறுகிய பீடபூமியாகும். டோக்லாம் பீடபூமி பூடான், இந்தியா மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதிகளை இணைக்கும் முச்சந்தியாக விளங்குகிறது. டோக்லம் கணவாய் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும், சீனாவின் திபெத்தையும் இணைக்கிறது.
அதனாலேயே இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி எல்லை பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் சீனா டோக்லாம் பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கிராமங்களை உருவாக்கும் சீனா:
இதனை அடிப்படையாக கொண்டு சீனா முழு அளவிலான கிராமத்தை உருவாக்கியுள்ளதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்டல் ஆய்வகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் டேமியன் சைமன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவின் இந்த சட்ட விரோதமான கட்டுமான பணிகளை கண்டறிந்ததாக கூறியிருந்தார்.
சாலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு:
இதற்கு முன் 1988 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் சீனாவும், பூடானும் எழுத்துப்பூர்வமாக செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இப்பகுதியை இதுவரை உள்ள நிலையின் படியே இருக்கவும், இப்பகுதியில் இருநாடுகளும் அமைதி காக்கவும் ஒப்புக் கொண்டது. ஆனால் தற்போது டோக்லம் பகுதியில் சீனா சாலை அமைப்பதை பூடான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தியாவிலும் கிராமங்கள் அமைத்தல்:
அதுமட்டுமல்லாமல் அருணாச்சல பிரதேசத்திலும் சீனா கிராமங்கள் அமைத்திருந்தது. அப்போது, சீனாவின் இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், 'பெயர் மாற்றுவது' கள நிலவரத்தின் உண்மைகளை மாற்றாது என்றும், 'அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்; எப்போதும் அப்படியே இருக்கும்' எனவும் இந்தியா கூறியிருந்தது.
சீனா தனது புதிய 'நில எல்லைச் சட்டத்தின்' கீழ் இந்தப் பெயர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய சட்டம் 2022ம் ஆண்டு ஜனவரி-1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.