'அசால்ட்டா' மாசம் ரூ. 7 லட்சம் வரைக்கும் சம்பாதிக்கலாம்...! அட... இது 'செம' மேட்டரா இருக்கே...! - யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள 'வேற லெவல்' நியூஸ்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல் யூடியூபில் வரும் 30 வினாடி வீடியோக்களுக்கும் ரெவன்யூ கிடைக்கும் என யூடியூப் தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் தெரிவித்திருக்கிறார்.
யூடியூப்-ல் தற்போது வெளிவந்துள்ள புதிய அப்டேட்டான யூடியூப் 'ஷார்ட்ஸ்' இன்ஸ்டா ரீல்ஸ் போல் பிரபலமாகி வருகிறது.
30 வினாடிகள் வரும் இந்த ஷார்ட்ஸ் வீடியோவை அதிக பார்வையாளர்கள் பார்த்தால் மாதம் இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் வரை ஒருவரால் சம்பாதிக்க முடியும் என யூடியூப் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இந்த 'ஷார்ட்ஸ்' செயலிக்காகவே யூடியூப் நிர்வாகம் 2021-2022 ஆம் ஆண்டிற்கு கூடுதலாக 100 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியிருக்கிறது.
அதோடு, படைப்பாளர்கள் வெளியிடும் இந்த 'ஷார்ட்ஸ்' வீடியோவில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த 1,000 திறமையாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் வியூஸ் அடிப்படையில் மாதத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.74,000-த்திலிருந்து ரூ. 7.4 லட்சம் வரை வழங்கப்பட இருக்கிறது என யூடியூபின் தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் தெரிவித்திருக்கிறார்.
கூடுதலாக 'சூப்பர் சாட்' என புதிய அமைப்பின் மூலம் தங்களுடைய பார்வையாளர்களிடம் நேரடியாக பேசிக்கொண்டாலும் வருவாயை பெருக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.