இ-நாமிநேசனுக்கு டிச.31 கடைசி தேதி... முடங்கிய EPFO இணையதளம்... காலக்கெடு நீட்டிக்கப்படுமா?
முகப்பு > செய்திகள் > வணிகம்EPFO இணையதளப் பக்கம் கடந்த சில நாட்களாக சரியாக வேலை செய்யாத சூழலில் தற்போது முற்றிலுமாக முடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
EPFO இ-நாமினேஷன் செய்ய டிசம்பர் 31-ம் தேதி 2021 வரையில் தான் கால அவகாசம் கொடுத்துள்ளது மத்திய அரசு. இதனால் பயனாளர்கள் தங்களது நாமினி தகவல்களை அப்டேட் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், பலரும் இ-நாமினேஷன் தாக்கல் செய்யவும் KYC அப்டேட் செய்யவும் EPFO இணைய பக்கத்தில் குவிந்து வருகின்றனர்.
இதனால் கடந்த ஒரு வாரமாகவே சரியாக இயங்காமல் இருந்து EPFO தளம் தற்போது முற்றிலும் பயன்படுத்த முடியாது முடங்கி உள்ளது. ட்விட்டர் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் பயனாளர்கள் இதுகுறித்த புகார்களை பதிவு செய்து வருகின்றனர். டிசம்பர் 31-ம் தேதி கடசி நாள் ஆக இருக்கும் போது அரசு EPFO தளத்தை அப்டேட் செய்து பயனாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
மேலும், பல EPFO பயனாளர்களும் மத்திய அரசு இ-நாமினேஷனுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல், ஆதார் மற்றும் பான் எண் இணைப்பு செய்வதற்கான கால அவகாசத்தையும் மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்திய அரசு, வரும் 2022 நிதியாண்டு முதல் ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகளை (லேபர் கோட்ஸ்) அமல் செய்யும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் புதிய விதிகள் மூலம் அடிப்படை ஊதியம் மற்றும் பி.எஃப் உள்ளிட்டவைகளிலும் பெரிய மாற்றம் இருக்கும். அதாவது பி.எஃப் மூலம் சேமிக்கப்படும் பணம் அதிகரிக்கும் என்றும் கையில் வாங்கும் ஊதியம் குறையும் என்று தெரிகிறது.