'காக்னிசண்ட்' நிறுவனத்தின் அதிரடி முடிவு... பறக்கும் புகார்களால் 'கலங்கிப்போன' ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்காக்னிசண்ட் நிறுவனம் அதன் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல உலகளாவிய அளவில் வேலையிழப்பு நடவடிக்கைகள் தீவிரமடைய தொடங்கியுள்ளன. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை சத்தமின்றி பணிநீக்கம் செய்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் அதன் பெஞ்ச் ஊழியர்களில் ஆயிரக்கணக்கானோரை வேலையில் இருந்து நீக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் சுமார் 18 ஆயிரம் ஊழியர்களை பெஞ்ச் செய்தபின் பின் அதிகளவிலான பணிநீக்கங்களை காக்னிசண்ட் செய்து வருவதாக சென்னை மற்றும் கர்நாடகா ஊழியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
மேலும் இதுதொடர்பாக சென்னை மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ஊழியர்கள் ஐடி ஊழியர்கள் சங்கத்திற்கு புகார்கள் அனுப்பி இருக்கிறார்களாம். இதனால் இந்த பிரச்சினை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெஞ்ச் ஊழியர்கள் 41 நாள் கழித்து ராஜினாமா செய்யச்சொல்லி தங்களை கட்டாயப்படுத்துவதாக ஏற்கனவே இந்நிறுவனத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் இந்நிறுவனத்துக்கு 2.9 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை டிசிஎஸ் நிறுவனத்துக்கு அடுத்து இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட நிறுவனமாக காக்னிசண்ட் திகழ்கிறது. எனவே இந்த பணி நீக்கத்தால் இந்திய ஊழியர்களே அதிகம் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
