பறந்த புகார்... பிறந்த மாற்றம்... இதுதான் மாருதி சுசூகிக்கு அழகு... வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்

By Rahini Aathma Vendi M | Nov 29, 2021 02:20 PM

மாருதி சுசூகி கார் பயன்படுத்தும் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு இலவச சேவை ஒன்றை அறிவித்துள்ளது அந்நிறுவனம். இதுகுறித்த முழுத் தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Maruti Suzuki announces free service campaign for certain models

மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்களை வைத்துப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களில் என்ஜின் மோட்டாரில் ஏதோ சத்தத்துடன் கூடிய அதிர்வுகள் ஏற்படுவதாக நிறுவனத்திடம் புகார் அளித்தனர்.

Maruti Suzuki announces free service campaign for certain models

மாருதி எர்டிகா, சிஃப்ட், டிசைர், சியஸ், XL6 மற்றும் இக்னிஸ் ஆகிய கார்களில் சம்பந்தம் இல்லாத சத்தத்துடன் கூடிய அதிர்வுகள் ஏற்படுவதாக நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் எழுந்தன. இது கார்களின் என்ஜினில் தவறான 'மெளண்ட்' பயன்படுத்தப்பட்டதன் விளைவு எனக் கூறப்படுகிறது.

Maruti Suzuki announces free service campaign for certain models

இதையடுத்து மாருதி சுசூகி நிறுவனமே முன் வந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மாருதி சுசூகி நிறுவனம் சார்பில் நாடு முழுவதுமே ஒரு சர்வீஸ் நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு காரையும் பரிசோதித்து என்ஜின் பாகங்களில் குறிப்பிட்ட பிரச்னை இருக்கிறதா என்பதை பரிசோதித்து அதை மாற்றி அமைத்துத் தருவதாகவும் மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

இந்த என்ஜின் கோளாறுகள் உள்ள மாடல் எண்களை மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Dzire – MA3EJKD1S00C76583 


Swift – MBHCZCB3SMG838412


Ertiga – MA3BNC32SMG361698


Ignis – MA3NFG81SMG319333


XL6 – MA3CNC32SMG261516


Ciaz – MA3EXGL1S00437213Maruti Suzuki announces free service campaign for certain models

இந்த மாடல்களில் மட்டுமே மேலே குறிப்பிட்ட பிரச்னைகள் இருப்பதாக சொல்லும் மாருதி சுசூகி நிறுவனம் வாடிக்கையாளர்கள் அளித்த புகார்களின் பெயரில் நேரடியாக வாகனத்தின் பழுது ஏற்பட்ட பாகத்தை மாற்றி பொருத்தித் தர உள்ளது.

மேலும், இந்த மாடல் கார்களை என்ஜின் மாற்றித் தரும் வரையில் மழைநீர் தேங்கி நிற்கும் சாலைகளில் வாகனத்தை இயக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : #AUTO #MARUTI SUZUKI #MARUTI CARS #BUDGET CARS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Maruti Suzuki announces free service campaign for certain models | Automobile News.