www.garudabazaar.com

THALAIVAR170: ஜெய் பீம் இயக்குனருடன் இணையும் ரஜினி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Rajinikanth Next 170th Film Official Announcement TJ Gnanavel

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இவங்க 2 பேரும் சினிமா பத்தி நிறைய கத்துக் கொடுத்துருக்காங்க".. பிரபல இயக்குனருடன் கமல்!

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Rajinikanth Next 170th Film Official Announcement TJ Gnanavel

Images are subject to © copyright to their respective owners.

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

Rajinikanth Next 170th Film Official Announcement TJ Gnanavel

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினிகாந்த் முக்கிய கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

இந்த படம் குறித்து லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "லைகா குழுமத் தலைவர் திரு. சுபாஸ்கரன் அவர்கள் பிறந்தநாளில் "சூப்பர் ஸ்டார்" திரு. ரஜினிகாந்த் அவர்களின் "#தலைவர் 170" திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

Rajinikanth Next 170th Film Official Announcement TJ Gnanavel

Images are subject to © copyright to their respective owners.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைமிகு தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற "சூப்பர் ஸ்டார்" திரு.ரஜினிகாந்த் அவர்களின் "#தலைவர்170" திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.

இயக்குநர் திரு.த.செ.ஞானவேல் இயக்கத்தில், இசைவழி நம் இதயங்களை இணைக்கும் திரு. அனிருத் இசையில், பிரம்மாண்டமான திரைப்படங்களைப் படைத்தளிக்கும் திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தலைமைப் பொறுப்பாளர் திரு. ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களின் தலைமையில், "#தலைவர் 170" திரைப்படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சூப்பர் ஸ்டார் அவர்களின் ஒவ்வொரு திரைப்பட வெளியீடும், ரசிகர்கள் கொண்டாடும் திருவிழாதான். அவருடன் மீண்டும் இணைவதில் லைகா புரொடக்ஷன்ஸ் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துகளோடு 2024-ல் மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராவோம். நன்றி!!!" என கூறப்பட்டுள்ளது.

Also Read | கேரள பாரம்பரிய முறையில் நடிகை பூர்ணாவின் வளைகாப்பு.. வேட்டி அணிவித்த உறவினர்கள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Next 170th Film Official Announcement TJ Gnanavel

People looking for online information on Rajinikanth, Rajinikanth Next 170th Film, TJ Gnanavel will find this news story useful.