www.garudabazaar.com

பிரபல 90S ஃபோன் மாடலில் 'ஜெயிலர்' தீம் மியூசிக்கை ரீ கிரியேட் செய்த ரஜினி ரசிகர்! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

Rajinikanth Jailer Movie Theme Music In Nokia old model

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரபுதேவா நடிக்கும் பஹிரா.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்.. ரன்னிங் டைம் விவரம்!

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  ஜெயிலர் படத்தின்  படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் நகரில் நடைபெற்றது. ஜெயிலர் படத்தின் தற்போதைய படப்பிடிப்பு மங்களூர் நகரில் நடைபெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நிவாஸ் எனும் ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர், தமது டிவிட்டர் பக்கத்தில் ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக்கை நோக்கியா பேஸிக் மாடல் ஃபோனில் இசைக் கோர்வையாக கம்போஸ் செய்யப்பட்டு ஜெயிலர் தீம் ஒலிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | LEO படத்தில் விஜய்க்கு மகளாக BIGGBOSS ஜனனியா..?.. ஜனனி EXCLUSIVE பதில் 😍

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Jailer Movie Theme Music In Nokia old model

People looking for online information on Anirudh, Jailer, Jailer Movie, Jailer Movie Theme Music, Nokia, Nokia old model, Rajinikanth will find this news story useful.