www.garudabazaar.com

"அவருக்கும் எனக்கும் மனஸ்தாபம்.. .." மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து ரஜினிகாந்த்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். 

Super Star Rajinikanth wishes Ex Tamilnadu CM Jayalalithaa

Images are subject to © copyright to their respective owners.

Also Read | மகனுடன் சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஷாலினி அஜித்குமார்.. டிரெண்டாகும் வைரல் ஃபோட்டோ!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அஇஅதிமுக கட்சி தொண்டர்கள் அவருடைய போட்டோவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Super Star Rajinikanth wishes Ex Tamilnadu CM Jayalalithaa

Images are subject to © copyright to their respective owners.

அந்த வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம்.  மதிப்பிற்குரிய அமரர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின்  75-வது பிறந்தநாளில் அவர் நம்ம கூட இப்போது இல்லையே என்கிற வருத்ததோடு அவரை நினைவுபடுத்திக் கொள்கிறேன். ஜெயலலிதா போல இன்னொரு பெண்மணியை பார்க்கவே முடியாது. அவருடைய அழகு, கம்பீரம், அறிவு,  துணிச்சல், ஆளுமை. மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு புரட்சி தலைவர் பெயர் வந்ததுக்கு காரணம் அனைவருக்கும் தெரியும்.

Super Star Rajinikanth wishes Ex Tamilnadu CM Jayalalithaa

Images are subject to © copyright to their respective owners.

அவருடைய மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டபோது, அந்த கட்சியில் மிகமிக பெரிய திறமையான தலைவர்கள் இருக்கும்போது, ஒரு தனிப் பெண்மணி அந்த பிளவுபட்ட கட்சியை ஒன்றாக்கி. அந்த கட்சியை இன்னும் பலப்படுத்தி, அதை பெரிய கட்சியாக்கி, பல வருடங்கள் தமிழ் நாட்டை ஆண்டவர். இதெல்லாம்  சாதாரண விஷயம் இல்லை. இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஜெயலலிதா அவர்களை அவ்வளவு மதித்தார்கள். அவரின் திறமையை பார்த்து பிரம்மித்தார்கள் .

Super Star Rajinikanth wishes Ex Tamilnadu CM Jayalalithaa

Images are subject to © copyright to their respective owners.

ஒரு காலகட்டத்தில் எனக்கும அவருக்கும் ஒரு மனஸ்தாபம். அவருக்கு எதிராக நான் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதுக்கு அப்புறம் என்னுடைய பொண்ணு கல்யாணத்துக்கு அவரை அழைக்க போகும் போது, அதை எல்லாத்தையும் மறந்து, என் பொண்ணு  கல்யாணத்தை நடத்தி கொடுத்தாங்க. அவ்ளோ பெரிய கருணை உள்ளம். அவர்கள் நாமம் வாழ்க” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார்.

Also Read | TRENDING: ஜெயிலர் ஷூட்டிங்கில் இணைந்த தமன்னா.. அவரே வெளியிட்ட வைரல் Glimpse!

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth wishes Ex Tamilnadu CM Jayalalithaa

People looking for online information on Rajinikanth, Rajinikanth wishes Ex Tamilnadu CM Jayalalithaa will find this news story useful.