www.garudabazaar.com

"பையன் ரொம்ப வளந்துட்டான்"..ஶ்ரீகாந்த் மகனின் போட்டோவுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கமெண்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஶ்ரீ காந்த்.

Aishwarya Rajinikanth comment about Srikanth Son

Images are subject to © copyright to their respective owners.

Also Read | DASARA: நானியின் லேட்டஸ்ட் பதிவு.. REPLY போஸ்ட் மூலம் பதில் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!😍 செம்ம வைரல்

கே. பாலச்சந்தர் இயக்கிய சீரியலில் நடித்து பிரபலமான ஶ்ரீ காந்த், ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இவர் நடிப்பில் ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, ஜூட், போஸ், மனசெல்லாம், பூ,  துரோகி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். சமீபத்தில் இவர் நடிப்பில் காஃபி வித் காதல் திரைப்படம் வெளியானது.

Aishwarya Rajinikanth comment about Srikanth Son

Images are subject to © copyright to their respective owners.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள சினிமாவிலும் நடிகர் ஶ்ரீகாந்த் நடித்துள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகில் என்ற மகனும், ஆஹனா என்ற மகளும் உள்ளனர்.

Aishwarya Rajinikanth comment about Srikanth Son

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் ஶ்ரீகாந்த் நேற்று பிப்ரவரி 28 அன்று தமது 44-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது மகன் ஆகிலுக்கும் நேற்று தான் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான புகைப்படங்களை அவரது மனைவி வந்தனா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.  ஶ்ரீ காந்த் & அவருடைய மகன் ஆகிலின் புகைப்படங்களை வந்தனா பகிர்ந்து, "என்னுடைய பெரிய & சிறிய ஸ்டார்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். " என பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Aishwarya Rajinikanth comment about Srikanth Son

Images are subject to © copyright to their respective owners.

இந்த பதிவில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "ஐயோ!!! பையன் உயரமான மனிதராக மாறிவிட்டார்!! 😍 கடவுள் அவரை ஆசீர்வதிப்பாராக & அத்தையின் பெரிய பெரிய அரவணைப்பு!" என ஆச்சரியமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கமெண்ட் செய்துள்ளார்.

Also Read | தாஜ்மஹாலில் நடிகை மஞ்சு வாரியர்.. நண்பர்களுடன் இந்த பிரபல நடிகரும் இருக்காரு! PHOTOS

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth comment about Srikanth Son

People looking for online information on Aishwarya Rajinikanth, Srikanth will find this news story useful.