www.garudabazaar.com

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - லதா தம்பதியின் 42வது திருமண நாள்... வாழ்த்தும் பிரபலங்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - லதா தம்பதி இன்று தங்களது 42-வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Superstar Rajinikanth and Latha 42nd wedding anniversary

                            Images are subject to © copyright to their respective owners.

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அதன்பிறகு வெற்றிப் படிக்கட்டில் பயணிக்க துவங்கிய ரஜினிகாந்த் தற்போது இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படமான ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - லதா தம்பதி தங்களுடைய 42வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். கடந்த 1981 ஆம் ஆண்டு லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ரஜினிகாந்த். திரையுலகில் பல்வேறு உயரங்களை எட்டியுள்ள ரஜினிகாந்தின் 42 வது திருமண நாளை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Superstar Rajinikanth and Latha 42nd wedding anniversary

People looking for online information on Anniversary, Latha, Rajinikanth, Wedding will find this news story useful.