www.garudabazaar.com

கேரள பாரம்பரிய முறையில் நடிகை பூர்ணாவின் வளைகாப்பு.. வேட்டி அணிவித்த உறவினர்கள்! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூர்ணா, தனது 7-ஆம் மாத வளைகாப்பு புகைப்படங்கள் & வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Actress Purnaa Baby Shower Function Kannur Tradition

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இவங்க 2 பேரும் சினிமா பத்தி நிறைய கத்துக் கொடுத்துருக்காங்க".. பிரபல இயக்குனருடன் கமல்!  

நடிகர் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா.  ஷாம்னா காசிம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்பெயராக பூர்ணா என்றே ரசிகர்களால் அறியப்படுகிறார்.

அருள்நிதி நடித்த தகராறு, சசிக்குமாரின் கொடிவீரன், சவரக்கத்தி உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தலைவி படத்தில் கங்கனா ரனாவத்தின் தோழியாக நடித்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

Actress Purnaa Baby Shower Function Kannur Tradition

Images are subject to © copyright to their respective owners.

கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, காப்பான், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற படங்களிலும் பூர்ணா நடித்துள்ளார்.

தமிழ் சினிமா தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற சினிமா படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பூர்ணா. கடைசியாக நடிகை பூர்ணா நடிப்பில்   வெளியான 'விசித்திரன்' படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக  நடித்திருந்தார்.

Actress Purnaa Baby Shower Function Kannur Tradition

Images are subject to © copyright to their respective owners.

தற்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் பிசாசு-2 படம் ரிலீசாக உள்ளது.

கேரளாவை சார்ந்த மலையாள நடிகையான பூர்ணா, சானித் ஆசிப் அலி எனும் தொழில் அதிபரை இஸ்லாமிய முறைப்படி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். மணமகன் சானித் ஆசிப் அலி JBS நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். துபாய் & அமீரகத்தில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Actress Purnaa Baby Shower Function Kannur Tradition

Images are subject to © copyright to their respective owners.

சில நாட்களுக்கு முன் நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். மேலும் கணவர் வீட்டில் நடந்த தமது வளைகாப்பு புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பூர்ணா பகிர்ந்திருந்தார்.

Actress Purnaa Baby Shower Function Kannur Tradition

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கண்ணூர் மாவட்டத்தின் பாரம்பரிய முறைப்படி நடந்த வளைகாப்பு புகைப்படங்களை பூர்ணா வெளியிட்டுள்ளார். வேட்டி கட்டி கண்ணூர் இஸ்லாமிய மரபுப்படி இந்த வளைகாப்பு பெண் வீட்டில் நடந்துள்ளது. வளைகாப்பில் குடும்பத்துடன் இருக்கும் வீடியோ & புகைப்படங்களை பூர்ணா வெளியிட்டுள்ளார்.

Also Read | சுந்தரி சீரியல் படைத்த மெகா சாதனை.. ஹீரோயின் பகிர்ந்த செம தகவல்!

கேரள பாரம்பரிய முறையில் நடிகை பூர்ணாவின் வளைகாப்பு.. வேட்டி அணிவித்த உறவினர்கள்! வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Purnaa Baby Shower Function Kannur Tradition

People looking for online information on Poorna, Shamna Kasim, Shamna Kasim Baby Shower Function will find this news story useful.