www.garudabazaar.com

'லால் சலாம்' படத்தில் பிரபல நடிகரின் மனைவி?.. 30 வருடங்களுக்கு பிறகு நடிப்பில் ரீ- என்ட்ரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் புதிய அப்டேட் நமக்கு கிடைத்துள்ளது.

Jeevitha Rajsekar joined in Aishwarya Rajinikanth Lal salaam

Images are subject to © copyright to their respective owners.

Also Read | காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய 'LEO' பட பிரபலம்.. வைரலாகும் பதிவு!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் '3', கௌதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார்.

Jeevitha Rajsekar joined in Aishwarya Rajinikanth Lal salaam

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Jeevitha Rajsekar joined in Aishwarya Rajinikanth Lal salaam

Images are subject to © copyright to their respective owners.

சிலநாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மனைவியும் நடிகையுமான ஜீவிதா ராஜசேகர் நடிக்க உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jeevitha Rajsekar joined in Aishwarya Rajinikanth Lal salaam

Images are subject to © copyright to their respective owners.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு ஜீவிதா ராஜசேகர் நடிக்க உள்ளார். 1990-ல் இருந்து நடிப்பதில் இருந்து ஒதுங்கி இயக்குனர் மற்றும் அரசியல்வாதியாக விளங்கினார். தற்போது லால் சலாம் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | PS2 : "காதலே வில்லனா இருக்கும்".. பொன்னியின் செல்வன் - 2 மேக்கிங் GLIMPSE.. வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Jeevitha Rajsekar joined in Aishwarya Rajinikanth Lal salaam

People looking for online information on Aishwarya Rajinikanth, Jeevitha Rajsekar, Lal Salaam will find this news story useful.