கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலையுள்ளது. இதன் ஒரு பகுதியாக நெட்டிஷன்கள் வித்தியாசமான பதிவுகள் மூலம் ஒருவருக்கு ஒருவர் சேலஞ்ச்விடுத்து வருகின்றனர்.

அந்த வைகையில், ரியல்மேன் சேலஞ்ச் , பில்லோ சேலஞ்ச் என பல்வேறு விஷயங்கள் டிரெண்டாகி வருகிறது. அதன் ஒருபகுதியாக பிரபல நடிகை பாயல் ராஜ்புட் தலையணையை உடையாக அணிந்து ஃபோட்டோ பகிர அது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அவர் வெறும் நியூஸ் பேப்பரை உடையாக அணிந்து ஃபோட்டோ வெளியிட்டுள்ளார். அது தற்போது வேறலெவல் வைரலாகி வருகிறது.
பாயல் ராஜ்புட் தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 , வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ஏஞ்சல் என்ற படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை ஆர்.எஸ்.அதியமான் இயக்கவுள்ளார்.