பிரபல இயக்குனர் மகளுக்கு செய்திருக்கும் ஹேர்ஸ்டைல்... இதுக்கு பேரு கொரோனா ஹேர் ஸ்டைலாம்...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இட்டுள்ளார். மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பிரபலங்களும் வீட்டில் அடைந்திருக்கின்றனர். பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் ரசிகர்களுக்கு பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் 'மூடர்கூடம்' படத்தின் இயக்குனர் நவீன் தற்போது ஒரு பதிவிட்டு உள்ளார். அதில் தன் செல்ல மகளுக்கு கொரோனா ஹேர்ஸ்டைல் செய்து அதை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மூடர்கூடம் படம் பலருக்கும் இன்றும் பேவரைட்டாக இருக்கும் படம். அந்த படத்தின் தனி ஸ்டைல் பலரையும் ஈர்த்தது. இந்நிலையில் அந்த புகைப்படத்தை பதிவு இட்டு அதன் மேல் Corona hairstyle for #Leni என்று கூறியிருந்தார்.
இதனை பார்த்து ரசிகர்கள் மகளுக்கு ஏன் லெனி என்று பெயரிட்டீர்கள் என்று கேட்க அதற்கு பதில் அளித்திருக்கும் இயக்குனர் "'புரட்சியாளர் லெனின் பிறந்த நாள் இன்று. தோழருக்கு வணக்கங்கள். அவர் நினைவாக என் கடைக்குட்டிக்கு லெனி என்று பெயரிட்டேன். மனித சமுதாயத்திற்காக வாழும், ஆதிக்கத்தை எதிர்க்கும் போர்குணம் கொண்ட பெண்ணாக வளர வேண்டும் என்பது என் விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.
Corona hairstyle for #Leni pic.twitter.com/rQfqRgiBji
— Naveen Mohamedali (@NaveenFilmmaker) April 18, 2020