“இவன் கூட வேல பாக்குறதுக்கு தள்ளுவண்டில…” தர்பாரில் தன் கேரக்டர் பற்றி சொன்ன யோகி பாபு
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 07, 2019 11:38 PM
சூப்பர் ஸ்டாரின் தர்பார் பட இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. நிகழ்வில் படத்தில் பணிபுரிந்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய யோகிபாபு, “பாஷா படத்த 4 ரூபா டிக்கட்டுக்கு படிச்சுகுட்டு பாத்தவன் நான். இப்ப அவர் கூட நடிக்கிறன் எப்டி இருக்கும்!
படத்துல சார் கூட காம்போ ரோல் பண்ணி இருக்கன். எனக்கு அவர் நெறய டயலாக் சொல்லி கொடுப்பார். படத்துல ஒரு லைன் வரும் “இவன் கூட வேல பாக்குறதுக்கு தள்ளுவண்டில கட வெச்சு நல்லா சம்பாதிச்சுடலாம்”ணு இதுல இருந்து புரிஞ்சுக்கோங்க தலைவருக்கும் எனக்கும் என்ன கேரக்டர்ணு.”
யோகி பாபு தன் திருமணம் பற்றி சொல்லும்போது,”நாட்ல எவ்வளவோ பிரச்சன இருக்கு அத விட்டுட்டு இத கேக்குறிங்க” என்று கலாய்த்தார். பின், தலைவர், ”யோகிபாபு, தை மாசம் உங்களுக்கு கல்யாணம் நடந்துடும்’ணு சொன்னார். நடந்துடும்” என தெரிவித்தார்.