'இன்ட்ரோ ஃபைட் சீன்...' - 'தர்பார்' பற்றி சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் சொன்ன சீக்ரெட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 07, 2019 09:35 PM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள படம் 'தர்பார்'. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய இந்த படத்தின் சண்டை பயிற்சி இயக்குநர்கள் ராம் மற்றும் லக்ஷ்மன், ''தமிழ்நாடு இல்ல தாய் நாடு. தாய் பாசம் அன்பு குடுத்து விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு நன்றி. ரஜினி சாருடன் பணிபுரிவது குறித்து நிறைய எதிர்பார்ப்பு இருந்தது.
இன்ட்ரோ ஃபைட் கம்போஸ் பண்ணி கேரவனில் சார பார்த்தேன். சார் சிம்பிளா 'நல்ல கம்போஸ் பண்ணிருக்கே'னு சொன்னாரு. கொஞ்ச நாள் அப்றோம் ஸ்டைலான கெட் அப்ல வந்தாரு எல்லாமே மாறிடுச்சு. இன்ட்ரோ ஃபைட் சீன் ரொம்ப நல்லா இருக்கும். படத்துல ஃபிரேம் டு ஃபிரேம் சார் தான் நடிச்சாரு. டூப்பே போடல.
தன் குடும்பம் நல்லா இருக்கணும்னு நினைக்குறது காமன் மேன் ஊர் மக்கள் நல்லா இருக்கணும்னு நினைக்குறது. சூப்பர் மேன். 24 மணி நேரமும் மக்கள் நல்லா இருக்கணும்னு நினைச்சாரு'' என்று பேசினார்.