''தர்பாருக்கு பிறகு ரஜினி சார் இப்படித்தான் பஞ்ச் பேசுவாரு...'' - பிரபல நடிகை கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 07, 2019 10:20 PM
'பேட்ட' படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'தர்பார்'. லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பாக கே.சுபாஷ்கரன் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் நயன்தாரா, யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை நிவேதா தாமஸ், ''முன்னாடி சொல்வாரு ஆண்டவன் சொல்வான் அருணாச்சலம் முடிப்பானு. ஆனா தர்பார் அப்றோம் ஆதித்யா அருணாச்சலம் செய்து முடிப்பானு இருக்கும். ஒரு நாள் வீட்டுக்கு வாங்க சார். உங்களுக்கு நான் சமச்சு தரணும்னு விரும்பறேன். சார் விரும்பி சாப்பிடுவாரு. நான் சமச்சா சாப்டுவார்ல'' என்றார்.
Tags : Darbar, Rajinikanth, Anirudh Ravichander, AR Murugadoss