”துப்பாக்கி தோட்டா வேக திரைக்கதை…” பாடலாசிரியர் விவேக் தர்பார் இசைவெளியீடில் பேச்சு
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 07, 2019 10:52 PM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள படம் 'தர்பார்'. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதில் மேடையில் பேசிய பாடலாசிரியர் விவேக், “40 வருஷம் கழிச்சும் ரஜினி சார் எல்லா ரசிகர்களையும் ஈர்த்து வெச்சுருக்கார்ணா காலத்தின் சுழற்சிய முடிச்சு எத்தன விஷயத்த கத்துருக்கணும், விட்டுருக்கணும். எல்லாம் அவரோட தன்னம்பிக்கைனால தான்.
ஏ.ஆர்.முருகதாஸ் ’ஒரு விரல் புரட்சி’க்கு சொன்ன கமண்ட்ஸ் இன்னும் என் காதுல கேக்குது. கத்தி போல் கிழிக்கும் படங்களும், துப்பாக்கி தோட்டா வேக திரைக்கதையும் கொண்டது அவர் படங்கள்.லைக்கோவோட சேர்ந்து நான் இந்தியன் 2லயும் பணியாற்றிட்டு இருக்கன்.
திருநங்கைகள் கிட்ட பேசுனாலே அவமானப்படுவம்ணு நினைக்கிறவங்கள்ள நானும் ஒருத்தன். அவங்கள பிச்சை எடுக்க கூடாதுன்ணு சொல்றம். ஆனா அவங்க வாழ்றதுக்கு நாம என்ன பண்ணிருக்கோம்ணு நெனச்சு பாக்கணும். தர்பார்ல திருநங்கை பாடகி ஒருத்தங்க கூட பணிபுரியுற உன்னதமான வாய்ப்பு கெடச்சுது. அவங்க பால அவங்க தான் முடிவு செய்யணும், நாம அதுல சக்கர மட்டும் தான் கலக்கணும்.” இவ்வாறு பாடலாசிரியர் விவேக் பேசினார்.