”பாலிவுட், தெலுங்கு எல்லா இண்டஸ்ட்ரிலயும் தலைவர் சாயல்…” இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 07, 2019 08:47 PM
லைக்கா தயாரிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா இன்று (07.12.2019) நடைபெற்றது.

இதில் ரஜினி காந்த் தன் மனைவி லதா, மகள்கள் சவுந்தர்யா மற்றும் ஐஷ்வர்யா என்று குடும்பத்துடன் கலந்து கொண்டார். இவர்களோடு இயக்குநர் முருகதாஸ், ராக்ஸ்டார் அனிருத், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், சுனில் ஷெட்டி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய முருகதாஸ் “உங்களுக்கு எல்லாம் சீனியர் ரஜினி ஃபேன் நான். சின்ன கொழந்தையா இருக்கும்போது நிலா பாத்து சாப்பிடுவோம். அந்த நிலாலையே எறங்குனா எப்டி இருக்கும்ணு அப்ப தோணும். இப்ப ரஜினி சார் கூட உக்காற்றது அப்டி இருக்கு எனக்கு. எம்.ஜி.ஆர்-கு அப்றம் ரஜினிண்ணு சொல்வாங்க. ஆனா ரெண்டு பேருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஆனா, ரஜினிக்கு அப்றம் எல்லா ஹீரோ கிட்டயும் அவர் சாயல் இருக்கு. பாலிவுட், தெலுங்குணு எல்லா இண்டஸ்ட்ரிலயும் தலைவர் சாயல் இருக்கு.” என அவர் கூறினார்.