திடீரென 15 வயது பெண்ணாக மாறிய பிரபல ஹீரோயின் - மேஜிக் பாருங்க - வைரலாகும் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்த படத்தை பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் யஷிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, பிரபல நடிகை ரவீனா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை ரவீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவரது சட்டென சிறுவயது பெண்ணாக உருமாறுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது. 15 வயது பெண்ணாக அவரது மகள் ரஷா தோன்றுகிறார். அந்த பதிவில், மீண்டும் 15 வயதிற்கு செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Tags : Raveena Tandon, Lockdown