''சதி நடக்கிறது, இனி பெரிய ஹீரோக்கள் உருவாக முடியாது, கடைசி வரை அவர்கள் ஓடிடி ஹீரோ தான் ''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாக முடியாத நிலையுள்ளது. இந்நிலையில் ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் பிளாட்ஃபார்மான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.

Popular Theatre owner speaks about OTT platform | பிரபல திரையரங்க உரிமையாளர் ஒடிடி பிளாட்ஃபார்ம் குறித்து கருத்து

இதனையடுத்து பொன்மகள் வந்தாள் படத்தை ஒடிடியில் வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பும், தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து ஆதரவும் கிடைத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், Behindwoods TVக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சின்னப்படங்கள் நன்றாக ஓடுனா, எங்கள மாதிரி சந்தோஷப்படுறவங்க யாருமே இருக்கமாட்டாங்க சார். நாங்க சின்னப் படங்களுக்கு தியேட்டர் கொடுக்காம தான் கடந்த வருடம் 190 படங்கள் ரிலீஸ் ஆகியதா ? அவங்க 800 படங்கள் எடுத்து வச்சுருந்தா, எப்படி தியேட்டர் கிடைக்கும்.

ஆயிரம் தியேட்டரில் 800 படங்களை எப்படி ரிலீஸ் செய்ய முடியும் ? பெரிய படங்களினால் எங்களுக்கு லாபமே கிடையாது. காரணம், சீட்டு கிழியிறது, பந்தோபஸ்துக்கு ஆள்போடுறதுனு செலவு அதிகம். ஒடிடியினால் புது ஹீரோக்கள், இயக்குநர்கள் உருவாக மாட்டார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோர் திரையரங்கில் ரசிகர்கள் கைத்கட்டி பாலாபிஷேகம் பண்ணி தான் வந்தார்கள். அது ஒடிடியில் நடக்காது.

புது ஹீரோக்கள் வந்துடக்கூடாதுனு சதி நடந்திட்டு இருக்கு. டிவி சீரியல்களில் நடிப்பவர்கள் பிரபலமாக முடிந்ததா ? ராஜா ராணி திரைப்படம் அட்லி அவர்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியைக் கொடுத்தது. அது ஒடிடியில் வெளியாகியிருந்தால், அவர் இருக்கிற இடமே தெரிஞ்சிருக்காது சார் என்றார்.

''சதி நடக்கிறது, இனி பெரிய ஹீரோக்கள் உருவாக முடியாது, கடைசி வரை அவர்கள் ஓடிடி ஹீரோ தான் '' வீடியோ

Entertainment sub editor