PS1 : “ராஜராஜ சோழனை ஏன் பொன்னியின் செல்வன்னு சொல்லணும்?” - இதான் காரணமா? விளக்கும் ஆய்வாளர்.!
முகப்பு > சினிமா செய்திகள்அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
Also Read | PS1 : "பொன்னியின் செல்வன்-ல இந்த Dual Role-அ பண்ண ஆசைப்பட்ட MGR" - உடைக்கும் வரலாற்று ஆய்வாளர்.!
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலின் பின்னணியில் இருக்கும் ராஜ ராஜ சோழ மாமன்னன் மற்றும் தஞ்சை பெருவுடையார் கோவில் உள்ளிட்ட குறித்த பிஹைண்ட்வுட்ஸின் பிரத்தியேக டாக்குமெண்ட்ரியில் பேசிய முன்னால் காவல் துறை உதவி- ஆணையரும், வரலாற்று ஆய்வாளருமான தஞ்சை C.இராஜமாணிக்கம், M.A பல்வேறு ஆச்சரியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசியவர், “ராஜராஜ சோழன் ஈழத்தில் ஏன் படையெடுத்தார்? தன் தந்தை சுந்தர சோழர் மரணிப்பதை அடுத்து, சிற்றப்பா ஆதித்த கரிகாலனுக்கு அரியணை உரிமை வர, இளவரசர் ராஜ ராஜ சோழன் இலங்கைக்கு செல்கிறார், இன்று இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்து, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பொருளாதார தடுமாற்றம் உண்டானது போலவே. அப்போதும் இலங்கையில் சோழனின் படையெடுப்பால் மக்கள் வாழ்வு நிலைகுலைந்து, பஞ்சம் - பட்டினி உள்ளிட்ட போர் விளைவுகள் ஏற்பட்டன.
அப்போது, தமிழ்நாட்டின் சோழ நிலத்தில் இருந்து எண்ணெய் வித்துக்கள், உணவு பொருட்களை கொண்டு இலங்கைக்கு கொண்டுவர உத்தரவிடுகிறார் ராஜராஜன். அப்போது அதை தடுத்து வாதம் பண்ணிய பழுவேட்டரையர், ஒரு நாட்டில் போர் தொடுத்தால், அந்த நாட்டில் இருந்துதான் நாம் செல்வங்களை கொண்டுவரவேண்டுமே தவிர, நாம் நம் செல்வங்களை அங்கு கொண்டு செல்ல கூடாது என்று கூறுகிறார். ஆனால் ராஜராஜனோ, என் போரும் பகையும் எதிரி நாட்டு மன்னன் மீதுதானே தவிர, மக்கள் மீது அல்ல என்று கூறினார். மனித நேயத்தின் உச்சம்.
பொன்னியின் செல்வன் கதையில் எந்த இடத்திலும் ராஜராஜன் என்று குறிப்பிடவில்லை. ஏனென்றால் பொன்னியின் செல்வன் நடைபெறும் காலத்தில் அருள்மொழிவர்மன் இளைஞராக இருக்கிறார். அவர் அரச பதவி ஏற்ற பிறகுதான் அவர் ராஜராஜனாகிறார். அதனாலேயே அவர் நாவலின் நாயகன் பொன்னியின் செல்வனாக வலம் வருகிறார்.” என்று பகிர்ந்துகொண்டார்.
Also Read | Varalaxmi Sarathkumar : மாறுபட்ட கதாபாத்திரத்தில் வரலஷ்மி நடித்துவரும் புதிய படத்தின் அடுத்த அப்டேட்.!
PS1 : “ராஜராஜ சோழனை ஏன் பொன்னியின் செல்வன்னு சொல்லணும்?” - இதான் காரணமா? விளக்கும் ஆய்வாளர்.! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Ponniyin Selvan PS1 SNEEK PEEK Video Released
- MGR Wanted To Do This Dual Roles In Ponniyin Selvan Exclusive
- Ponniyin Selvan Movie New Glimpse Video With Countdown
- Vikram Praises About Tanjore Big Temple Ponniyin Selvan
- Parthiban Sarathkumar Aishwarya Rai Viral Ponniyin Selvan BTS
- Vikram Karthi And Trisha Play Drums In PS1 Function
- Ponniyin Selvan Documentary Promo Released History Of Cholas
- Ponniyin Selvan Actors Selfie In Flight Goes Viral
- Ponniyin Selvan Devaralan Aattam Song Lyrics Video
- PS1 Karthi Jayam Ravi Vikram Aishwarya Lekshmi Flight Viral Pic
- Trisha And Aishwarya Lekshmi About Ponniyin Selvan
- Ponniyin Selvan PS1 Movie New Glimpse With Kamal Haasan Voice
தொடர்புடைய இணைப்புகள்
- Aishwarya Rai என் ஜோடி 😍 அழகுல மயங்காமயா, மனைவியா Manipulate பண்ணி துரோகம் - Sarathkumar Interview
- "Trisha... அழகி டி நீ" 😘 கதாநாயகிகளே பொறாமைப்படும் பேரழகி 🥰 Ponniyin Selvan
- Dhanush ரசிகர்களே Naane Varuvean 4am Show கிடையாதா ? - Thanu | Dhanush, Selvaraghavan
- NAANE VARUVEAN Vs PS 1 போட்டியா?.. இந்தா PROOF இப்போ சொல்லு - Kalaipuli S THANU Confident Interview
- "MANIRATNAM-க்கு KARTHI அளவுக்கு யாரும் உதவி பண்ணல.." 🥺 Karthi Gets Emotional | Suhasini
- Ego-வோட தான் READY ஆகுவாங்க... அண்ணி AISHWARYA RAI பற்றி பேசிய சின்ன பழுவேட்டரையர் PARTHIBAN
- "TRISHA என் அக்கா மாதிரி.." Aishwarya Rai-க்கு Translate பண்ண Vikram | Jayam Ravi Speech PS-1
- 🔴LIVE: PONNIYIN SELVAN Press Meet | Vikram, Aishwarya Rai, Jayam Ravi, Karthi, Trisha, Maniratnam
- MUST-WATCH Ponniyin Selvan DOCUMENTARY Before Movie Release 🏹 Behindwoods Promo
- "செருப்பால அடிப்பேன் டா"🤬செம திட்டு வாங்கிய Jayam Ravi 😨 Real Life-ல நடந்தது படத்துல வரும்😯
- சோழ நாட்டு இளவரசிகளா இல்ல சிலைகளா? இப்படி மின்னுறாங்களே 😍AISHWARYA RAI ,TRISHA CANDID MOMENTS
- Ponniyin Selvan 1 Hyderabad Pre Release Event - Photos