Buffoon D logo top
Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

பொன்னியின் செல்வன் படத்தின் முருகன் பாடல்.. புதிய ஸ்டில்களுடன் வெளியான LYRICAL VIDEO! வேறலெவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் தேவராளன் ஆட்டம் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

Ponniyin Selvan Devaralan Aattam Song Lyrics Video

Also Read | முதல்முறையாக மூக்குத்தி குத்திய நடிகை கனிகா.. அவரே வெளியிட்ட சூப்பர் போட்டோஸ்!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan Devaralan Aattam Song Lyrics Video

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த படத்தின்  அனைத்து பாடல்களும் ஏற்கனவே வெளியாகி உள்ளது.  Adventure, Angst, Joy, Pain, Bloodlust, Celebration என்ற உள்ளடக்கத்தில் 6 பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் பொன்னி நதி (Adventure) மற்றும் சோழா சோழா (Pain) பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இவை தவிர ராட்சஸ மாமனே (Joy), சொல் (Celebration) , தேவராளன் ஆட்டம் (Blood Lust) ,  அலை கடல் (Angst) ஆகிய பாடல்களும் வெளியாகி உள்ளன.

Ponniyin Selvan Devaralan Aattam Song Lyrics Video

இதில் தேவராளன் ஆட்டம் பாடலை யோகி சேகர் பாடியுள்ளார். இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த தேவராளன் ஆட்டம் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.  பாண்டிய ஆபத்துதவிகள் இந்த பாடலுக்கு நடனம் ஆடும் ஸ்டில்களும் வெளியாகி உள்ளன.

Ponniyin Selvan Devaralan Aattam Song Lyrics Video

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Ponniyin Selvan Devaralan Aattam Song Lyrics Video

Also Read | ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2.. வைரலாகும் படத்தின் BTS புகைப்படம்!

பொன்னியின் செல்வன் படத்தின் முருகன் பாடல்.. புதிய ஸ்டில்களுடன் வெளியான LYRICAL VIDEO! வேறலெவல் வீடியோ

மேலும் செய்திகள்

Ponniyin Selvan Devaralan Aattam Song Lyrics Video

People looking for online information on Devaralan Aattam Song Lyrics Video, Ponniyin Selvan part 1 will find this news story useful.