Buffoon D logo top
Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

விமான பயணத்தின் போது பொன்னியின் செல்வன் டீம் பகிர்ந்த செல்பி.. தீயாய் பரவும் புகைப்படம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த மாத இறுதியில் பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக இருக்கும் நிலையில் அப்படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.

Ponniyin Selvan Actors selfie in Flight goes viral

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1" செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்ள, கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளிலும் படக்குழுவினர் இயங்கி வருகின்றனர். சமீபத்தில், இயக்குனர் மணிரத்னம், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இப்படத்தின் தயாரித்திருக்கும் லைகா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறது. மும்பை நோக்கிய விமான பயணத்தின்போது, ஐஸ்வர்யா ராய். த்ரிஷா, ஏஆர் ரஹ்மான், விக்ரம் ஆகியோர் எடுத்த இந்த செல்பி புகைப்படத்தை பகிர்ந்து "குட்மார்னிங் மும்பை. நாங்கள் வந்துவிட்டோம்" எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Actors selfie in Flight goes viral

People looking for online information on AR Rahman, LycaProductions, Maniratnam, Ponniyin Selvan part 1, Vikram will find this news story useful.