Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

கூல் சுரேஷ் பூஜை அறையில் ஐசரி கணேஷ் போட்டோ.. VTK வெற்றிக்கு விலையுயர்ந்த பரிசு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்பு ரசிகரும் நடிகருமான கூல் சுரேஷூக்கு விலையுயர்ந்த பரிசை அளித்துள்ளார்.

Ishari ganesh Gifted Apple iPhone to cool suresh VTK

Also Read | அசத்தலான புதிய ஆக்சன் காட்சிகளுடன் 'பொன்னியின் செல்வன்'.. வெளியான சூப்பர் GLIMPSE வீடியோ!

வெந்து தணிந்தது காடு படம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தினை தமிழகம் முழுவதும்  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 473 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ishari ganesh Gifted Apple iPhone to cool suresh VTK

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிந்துள்ளனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக  நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Ishari ganesh Gifted Apple iPhone to cool suresh VTK

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கௌதம் மேனனுக்கு விலையுயர்ந்த ராயல் என்ஃபீல்டு புதிய கிளாசிக் 350 பைக்கை பரிசளித்துள்ளார். சிம்புவுக்கு டுயோட்டோ  காரை பரிசாக அளித்தார்.

Ishari ganesh Gifted Apple iPhone to cool suresh VTK

இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷூக்கு விலையுயர்ந்த ஐபோன் ஒன்றை ஐசரி கணேஷ் பரிசாக அளித்துள்ளார். இது போக கூல் சுரேஷ் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும்  ஏற்றுக்கொள்வதாகவும்  ஐசரி கணேஷ் வாக்குறுதி அளித்திருக்கிறார் என கூல் சுரேஷ் வீடியோவில் கூறியுள்ளார்.  ஐசரி கணேஷ் புகைப்படத்தை தனது வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்கியபடி புகைப்படத்தையும் கூல் சுரேஷ்  வெளியிட்டுள்ளார்.

Also Read | 'கோவிந்தா கோவிந்தா' என முழக்கமிட்ட காஜல் அகர்வால்.. கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம்!

கூல் சுரேஷ் பூஜை அறையில் ஐசரி கணேஷ் போட்டோ.. VTK வெற்றிக்கு விலையுயர்ந்த பரிசு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ishari ganesh Gifted Apple iPhone to cool suresh VTK

People looking for online information on Cool Suresh, Ishari K.Ganesh, Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu will find this news story useful.