Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

VIDEO: இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு இந்த ஊர்லயா நடக்குது? வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Indian 2 Movie Shooting at Thirupati Kajal Aggarwal Opens up

Also Read | கூல் சுரேஷ் பூஜை அறையில் ஐசரி கணேஷ் போட்டோ.. VTK வெற்றிக்கு விலையுயர்ந்த பரிசு!

கடந்த 1996-ஆம் ஆண்டு ஷங்கா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த   படம் இந்தியன். ஏ.‌எம். ரத்னம் தயாரிப்பில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன்.

இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

Indian 2 Movie Shooting at Thirupati Kajal Aggarwal Opens up

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார்.

Indian 2 Movie Shooting at Thirupati Kajal Aggarwal Opens up

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளனர். இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் திருப்பதி நகரில் நடந்து வருகிறது என்று நடிகை காஜல் அகர்வால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். இந்த படத்திற்காக காஜல் அகர்வால், குதிரை ஏற்றம் & களரி கற்றுக் கொண்டுள்ளார்.

Also Read | 'கோவிந்தா கோவிந்தா' என முழக்கமிட்ட காஜல் அகர்வால்.. கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம்!

VIDEO: இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு இந்த ஊர்லயா நடக்குது? வெளியான சூப்பர் அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Indian 2 Movie Shooting at Thirupati Kajal Aggarwal Opens up

People looking for online information on Indian 2 Shooting, Kajal Aggarwal, Kajal Aggarwal visit Thirupathi Temple, Thirupathi Temple will find this news story useful.