Buffoon D logo top
Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

"விக்ரம் & ஜெயம் ரவிக்கு ஜோடியா நடிச்சுட்டு.. இப்போ அக்கா தங்கையா".. மனம் திறந்த த்ரிஷா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Trisha and Aishwarya Lekshmi about Ponniyin Selvan

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trisha and Aishwarya Lekshmi about Ponniyin Selvan

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

Trisha and Aishwarya Lekshmi about Ponniyin Selvan

ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும்  நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படம் உருவான விதம் மற்றும் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள் குறித்து நடிகை த்ரிஷா & ஐஸ்வர்யா லெஷ்மி பேசியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் சரித்திர படங்களில் நடிக்க வேண்டும் என்பது தனது வாழ்நாள் கனவு என த்ரிஷா பேசியுள்ளார்.மேலும், ஜெயம் ரவி மற்றும் சீயான் விக்ரம் இருவருடனும் கதாநாயகியாக தான் நடித்துள்ளதாகவும், பொன்னியின் செல்வன் படத்தில் இருவருக்கும் அக்கா தங்கையாக நடித்தது வேடிக்கையாக இருந்தது என த்ரிஷா பேசியுள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராய் குறித்தும் த்ரிஷா பேசியுள்ளார்.

Trisha and Aishwarya Lekshmi about Ponniyin Selvan

பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் குறித்து ஐஸ்வர்யா லெஷ்மி பேசியுள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைத்ரி என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

"விக்ரம் & ஜெயம் ரவிக்கு ஜோடியா நடிச்சுட்டு.. இப்போ அக்கா தங்கையா".. மனம் திறந்த த்ரிஷா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Trisha and Aishwarya Lekshmi about Ponniyin Selvan

People looking for online information on Aishwarya Lekshmi, Jayam Ravi, Ponniyin Selvan, Ponniyin Selvan Part1, PS1, Trisha, Vikram will find this news story useful.