Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

'பொன்னியின் செல்வன்' படத்தில் பாண்டியர்கள்.. கமல்ஹாசன் குரலில் வெளியான புதிய GLIMPSE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர்  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Ponniyin Selvan PS1 Movie New Glimpse with Kamal Haasan voice

Also Read | VIKRAM VEDHA: பிரபல தமிழ் இசையமைப்பாளருடன் ஹிருத்திக் ரோஷன்.. சூப்பர் அப்டேட்!

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தின் புதிய ப்ரோமோ கிளிம்ப்ஸ் வீடியோவை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. பாண்டிய ஆபத்துதவிகள் குறித்த இந்த வீடியோ கமல்ஹாசன் குரலில் அமைந்துள்ளது. சேவூர் போரில் பாண்டிய மன்னர் வீரபாண்டியனின் தலையை கொய்த பின் ஆதித்த கரிகாலனையும் சோழ வமசத்தையும் அழிக்க வரும் பாண்டியர்கள் பற்றிய வீடியோவாக இது அமைந்துள்ளது. ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

Also Read | நானே வருவேன் படத்திற்காக.. உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்த யுவன்!

'பொன்னியின் செல்வன்' படத்தில் பாண்டியர்கள்.. கமல்ஹாசன் குரலில் வெளியான புதிய GLIMPSE வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan PS1 Movie New Glimpse with Kamal Haasan voice

People looking for online information on Kamal Haasan, Ponniyin Selvan part 1, Ponniyin Selvan PS1 Movie Updates will find this news story useful.