கொரோனா பாதிப்பால் சினிமா ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமா சார்ந்து இயங்கும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் சூர்யா குடும்பம் ரூபாய் 10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூபாய் 10 லட்சம், ரஜினி ரூபாய் 50 லட்சம், நடிகர் பிரகாஷ்ராஜ் 150 மூட்டை அரிசி மற்றும் தயாரிப்பாளர் தாணு 100 மூட்டை அரிசி அளித்துள்ளனர். இன்னும் பலர் தங்களால் முயன்றதை கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடன இயக்குனரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இது போன்ற சூழலில் ரஜினி, விஜய்சேதுபதி போன்ற நடிகர்கள் தானே உதவுவார்கள். இருப்பவர்களால் தானே கொடுக்க முடியும். வருண்மணியனுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
At such times actors are the ppl who come forward to help at such times. @rajinikanth @VijaySethuOffl. At the same time only who can afford can only do it. Including must thank @Varunmanian 👏👏👏 thank you for securing who work for their respective fields. 🙏🏽
— Gayathri Raguramm (@gayathriraguram) March 24, 2020