நீங்க எடுக்குற 'ரிஸ்க்' உங்க குடும்பத்துக்கு... 'பிரபல' நடிகை வேண்டுகோள்!
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு தற்போது முழு மூச்சில் களம் இறங்கியுள்ளது. பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு அறிவித்து இருப்பதால், அடுத்த 21 நாட்கள் இந்திய மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தினக்கூலியை நம்பி பிழைப்பு நடத்துபவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனினும் உயிர் மிகவும் விலை மதிப்பற்றது என்பதால் நாம் அனைவரும் இதை உத்தரவை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து நடிகை ஜாங்கிரி மதுமிதா தனது வீடியோவில் “பொருளாதார ரீதியாகவும், உயிர் பலி காரணமாகவும் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளன. நோய் பரவலை நாம் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை கைகளை நன்கு கழுவ வேண்டும். கையால் வாய், மூக்கு உட்பட எந்த உறுப்பையும் தொடவேண்டாம். தும்மல், இருமலின்போது கைக்குட்டையை பயன்படுத்துங்கள். அரசின் உத்தரவை மதியுங்கள். 144 தடையை விளையாட்டாக நினைத்து விடவேண்டாம். தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அத்தியாவசியமான பொருள்களை வாங்க வீட்டிலிருக்கும் ஒரு நபர் வெளியில் செல்லலாம். சிலர் விளையாட்டாக தடையை மீறி வெளியில் வர நினைக்கலாம். நீங்கள் எடுக்கும் இந்த ரிஸ்க் உங்கள் குடும்பத்தினருக்கும், சமுதாயத்தினருக்கும் ஆபத்தாக முடியும் என்பதை உணரவேண்டும்” என பேசியுள்ளார்.