BREAKING: ரஜினியின் ’அண்ணாத்த’ ரிலீஸ் எப்போன்னு தெரியுமா… படக்குழு வெளியிட்ட வீடியோ!
முகப்பு > சினிமா செய்திகள்ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்துக்கு பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இந்த படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி என்று ஒரு நடசத்திர பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக இமான் ரஜினியோடு கூட்டணி சேர்கிறார்.
முன்னதாக வெளியான படத்தின் டைட்டில் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்த நிலையில் கொரோனா பரவியதால் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் படத்தில் ரிலீஸ் குறித்து குறிப்பிட்டுள்ளது.
2021 பொங்கல் விருந்தாக அண்ணாத்த திரைக்கு வரும் என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#AnnaatthePongal2021#அண்ணாத்தபொங்கல்2021@rajinikanth @directorsiva @immancomposer @KeerthyOfficial @prakashraaj @khushsundar @sooriofficial @actorsathish pic.twitter.com/PY5qldztmC
— Sun Pictures (@sunpictures) May 12, 2020